Connect with us

சினிமா

ஒரு தடவைக்கு மேல சொல்றது தவறா? இயக்குநருக்கும் சூர்யாவுக்கும் நன்றி சொன்ன விக்னேஷ்..!

Published

on

Loading

ஒரு தடவைக்கு மேல சொல்றது தவறா? இயக்குநருக்கும் சூர்யாவுக்கும் நன்றி சொன்ன விக்னேஷ்..!

தேசிய விருது பெற்ற குழந்தைப் படம் “காக்கா முட்டை” 11 வருடங்களைக் கடந்து, தமிழ் சினிமாவின் முக்கிய படங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இயக்குநர் எம். மணிகண்டன் இயக்கத்தில் விக்னேஷ் நடித்து இருந்தார். மேலும் இந்த படம் ரசிகர்களின் மனதில் தனிச்சிறப்புடன் நிலைநிற்கின்றது. “பெரிய காக்கா முட்டை”வாக விக்னேஷ் நடித்து இருந்தார். மேலும்அவரின்  சிறப்பு நடிப்பை எடுத்துக்காட்டுகிறது.இந்தப் படத்திற்கு பிறகு விக்னேஷ் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பெரிதாக கவனிக்கப்படவில்லை. தற்போது அவர் நடித்துள்ள “பீனிக்ஸ்” திரைப்படம், அவருக்கு திரையுலகில் புதிய தொடக்கமாக அமைந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் படம் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.சமீபத்தில் நடைபெற்ற விழாவில், விக்னேஷ் தனது நன்றியை வெளிப்படையாக பகிர்ந்தார் .“மாஸ்டர்… என்னை மீண்டும் உருவாக்கி, ஒரு ஸ்டேஜ்ல ஏத்தி வைச்சதுக்கு எத்தனை தடவ வேண்டுமானாலும் நன்றி சொல்லலாம். ஆனா இங்க ஒரே தடவைதான் சொல்ல முடிகிறது,” என்றார் அவர் நெகிழ்ச்சியுடன்.அதனைத் தொடர்ந்து சூர்யாவைப் பற்றியும் பேசினார்: “சூர்யா தேங்க்ஸ் சொல்லணுமாடா? தோழமை பாதிக்குமோனு தயக்கம் இருந்துச்சு. ஆனா நம்ம மனசுல இருக்க gratitude-ஐ சொல்லனும் – Thank you so much, Suriya!””பீனிக்ஸ்” படம், விக்னேஷ்க்கு திரையுலகில் மறுமுயற்சிக்கு நம்பிக்கையையும், ரசிகர்களிடமிருந்து மீண்டும் அன்பையும் பெற்று தந்துள்ளது.மேலும் ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தளத்தில் விக்னேஷுக்கு இன்னும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வர வேண்டும் என்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன