உலகம்
காணாமாற்போன பிரித்தானிய கோடீஸ்வரர் : உயிர் தப்பிய இலங்கையர்

காணாமாற்போன பிரித்தானிய கோடீஸ்வரர் : உயிர் தப்பிய இலங்கையர்
இத்தாலியின் மத்தியதரைக் கடலில் புயல் தாக்கியதை அடுத்து மூழ்கிய சொகுசு படகில் இருந்து பிரித்தானிய கோடீஸ்வரர் காணாமற்போன நிலையில் இலங்கை பணியாளர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
22 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பிரித்தானியக் கொடியுடன் கூடிய சொகுசுப் படகு நேற்று (19) இத்தாலியின் சிசிலி தீவுக்கு அருகில் மூழ்கியது. இதில் பிரித்தானிய கோடீஸ்வரரான மைக் லிஞ்ச் உட்பட அறுவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போர்டிசெல்லோ துறைமுகத்தில் இருந்து அரை மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கப்பல் அப் பகுதியில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. (ஞ)