உலகம்
இத்தாலிக் கடற்பரப்பில் மாயமான இலங்கையர்கள்

இத்தாலிக் கடற்பரப்பில் மாயமான இலங்கையர்கள்
இத்தாலிக் கடற்பரப்பில், இலங்கையர்கள் உட்பட 22 பேருடன் பயணித்த சொகுசுக் கப்பல் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 7 பேரைக் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் சிசிலி தீவில் ஏற்பட்ட சூறாவளி காரணமாகவே இந்த இடர் சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியக் கடலோரக் காவற்படையினர் உடனடியாக மீட்புப் பணிகளை ஆரம்பித்தனர்.
15 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். ஏழு பேரைக் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.