உலகம்
சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த 20 இலங்கையர்கள் மீட்பு!

சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த 20 இலங்கையர்கள் மீட்பு!
மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பின் கீழ் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாகஇவர்களை இலங்கைக்கு அழைத்துவர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சுமார் 56 இலங்கையர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில்இ அவர்களில் 8 பேர் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டதுடன்மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் மேலும் 28 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (ஞ)