உலகம்
சுவிற்ஸர்லாந்தில் பெரும் வெள்ளம்!

சுவிற்ஸர்லாந்தில் பெரும் வெள்ளம்!
சுவிற்ஸர்லாந்தின் தெற்கு மேகியா பள்ளத்தாக்குப் பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாகக் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளப் பெருக்கை அடுத்து சில இடங்களில் மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கால் சிலர் காணாமற் போயுள்ள நிலையில், அவர்களைக் கண்டு பிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது. (ச)