உலகம்
திடீரென தீப்பற்றிய வானூர்தி!

திடீரென தீப்பற்றிய வானூர்தி!
(புதியவன்)
அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான வெர்ஜின் அவுஸ்திரேலிய வானூர்தி ஒன்று புறப்பட்டு சிறிது நேரத்தில் அதன் இயந்திரம் தீப்பிடித்ததையடுத்து நியூசிலாந்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
போயிங் 737-800 என்ற வெர்ஜின் அவுஸ்திரேலிய வானூர்தி நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் நகரத்தில் இருந்து மெல்போர்ண் நோக்கி புறப்பட்ட நிலையில் வானூர்தியின் இயந்திரம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனை தொடர்ந்து வானூர்தி அவசரமாக குயின்ஸ்டவுனுக்கு தெற்கே 150 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இன்வர்கார்கில் நகரத்திலுள்ள வானூர்தி தளத்தில் பாதுகாப்பாக தரையிரக்கப்பட்டது.
இந்த வானூர்தியில் 6 பணியாளர்கள் உட்பட 67 பேர் பயணித்துள்ளனர். விமான இயந்திரத்தில் பறவை ஒன்று சிக்கியமையே தீப்பிடிக்க காரணம் என குயின்ஸ்டவுன் வானூர்தித் தளத்தின் தலைமை நிர்வாகி க்ளென் சோவ்ரி தெரிவித்துள்ளார். (ஞ)