சினிமா
திரிசாவின் “தி ரோட்” ரீசர் நாளை வெளியீடு
திரிசாவின் “தி ரோட்” ரீசர் நாளை வெளியீடு
நடிகை திரிஷா, இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் ‘தி ரோட்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கடந்த 2000-ஆம் ஆண்டின் துவக்கத்தில் மதுரையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
‘தி ரோட்’ திரைப்படம் வருகிற ஒக்டோபர் 6ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ‘தி ரோட்’ படத்தின் டிரைலர் வருகிற செப்.21 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.