பொழுதுபோக்கு
ஒரு ஆளு, 4 பேர் அடிக்கனும்; அடிச்சிக்கங்க, யார் ஜெயிக்கிரானு பாப்போம்: விக்ரமை மோதவிட்ட பாலா!

ஒரு ஆளு, 4 பேர் அடிக்கனும்; அடிச்சிக்கங்க, யார் ஜெயிக்கிரானு பாப்போம்: விக்ரமை மோதவிட்ட பாலா!
இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக பிதாமகன் திரைப்படம் காலம் கடந்தும் இன்றுவரை ரசிகர்கள் மனதில் போற்றப்படும் ஒரு படைப்பாக இருக்கும் நிலையில், இந்த படத்தில் ஒரு சண்டைக்காட்சி நிஜமாகவே நடந்தது என்று இயக்குனர் பாலா கூறியுள்ளார்.தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவர் பாலா. வித்தியாசமான மற்றும் தனித்துவமாக படங்களை இயக்குவதில் வல்லவரான இவர், சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட ஒரு நபரை முக்கிய கேரக்டராக வடிவமைத்து படத்தை கொடுத்து வருகிறார், பாலா படம் என்றாலே அதில் கண்டிப்பாக வித்தியாசம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் வெளியான ஒரு படம் தான் பிதாமகன்.பாலா இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில், விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா, கருணாஸ், மனோபாலா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சிம்ரன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,விக்ரம், லைலா, சங்கீதா ஆகிய மூவரும் இந்த படத்திற்காக தமிழக அரசின் விருதை வென்றிருந்தனர். தமிழில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த பிதாமகன் சிவ புட்ரு என்ற பெயரில் தெலுங்கில், டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.கன்னடத்தில் அனந்தாரு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தில், உபேந்திரா தர்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர். 21 ஆண்டுகள் கடந்தாலும், பிதாமகன் திரைப்படம் இன்றும் ரசிகர்கள் விருப்பக்கூடியு ஒரு படமாகவும், இயக்குனர் பாலாவின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாகவும் அமைந்துள்ளது. இந்த படத்தில் ஒரு முக்கிய சண்டைக்காட்சி இடம் பெற்றிருக்கும். பிறந்ததில் இருந்து சுடுகாட்டிலேயே இருக்கும் விக்ரம் முதல்முறையாக ஊருக்குள் வருவார்.ஊருக்குள் வந்த விக்ரம் ஒரு ஹோட்டலுக்கு போவார். அப்போது அவரை ஹோட்டல் உள்ளே விடமாட்டார்கள். அங்கு ஒரு சண்டை காட்சி இடம் பெற்றிருக்கும். இந்த காட்சியை சண்டைப்பயிற்சியாளர் கம்போசிங் செய்ய போனபோது அவரை அழைத்த பாலா இங்கு உட்காருங்க என்று சொல்லிவிட்டு, ஃபைட்டர்களிடம் ஒரு ஆள் நீங்க 4 பேரும் அடிக்க வேண்டும். யார் ஜெயிக்கிறா என்று பார்ப்போம். ஜெயிக்க வேண்டும் என்று அடி. அவருக்கு அடிப்பட்டுவிடும் என்று அடிக்காமல் இருக்க கூடாது. அவன் ஓரளாவுக்கு அடித்தால் நீ அதை விட அதிகமாக அடிக்க வேண்டும்.ஜெயிக்க வேண்டும் என்று நினைத்து அடிச்சிக்கங்க என்று சொல்லிவிட்டு 3 கேமரா 3 பக்கத்தில் வைத்துவிட்டு, படமாக்கியுள்ளார். அப்போது ஜெயிக்க வேண்டும் என்று 5 பேரும் ரியலாக அடித்துக்கொண்டுள்ளனர். ஹீரோனு நினைத்து அடிக்காதே என்று சொன்னேன். அப்படித்தான் இந்த ஃபைட் எடுத்தது. இது கம்போசிங் ஃபைட் இல்லை என்று பாலா கூறியுள்ளார்.