Connect with us

தொழில்நுட்பம்

கனவுக்கு உயிர் கொடுக்கும் ஆப்பிள்: விஷன் ப்ரோவின் புதிய பரிமாணம்!

Published

on

Apple Vision Pro

Loading

கனவுக்கு உயிர் கொடுக்கும் ஆப்பிள்: விஷன் ப்ரோவின் புதிய பரிமாணம்!

ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ (Vision Pro) விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) ஹெட்செட்டிற்கான முதல் பெரிய மேம்படுத்தலை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருடம் நெருங்கும் நிலையில், இந்த அப்கிரேட் செயல்திறன் மற்றும் பயன்படுத்துவதற்கான வசதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.M4 சிப் மற்றும் AI மேம்பாடுகள்:புதிய மேம்படுத்தலில் வேகமான M4 ப்ராசஸர் இடம்பெறும். தற்போது ஐபேட் ப்ரோ, மேக்புக் ஏர்/ப்ரோ, ஐமேக் போன்ற ஆப்பிள் சாதனங்களில் இந்த M4 சிப் பயன்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள விஷன் ப்ரோவில் 3 வருடங்களுக்கு முன் வெளியான M2 சிப் உள்ளது. எனவே, இந்த M4 சிப் அப்கிரேட் மிகவும் அவசியமான மற்றும் வரவேற்கத்தக்க மாற்றமாகும்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, புதிய விஷன் ப்ரோ மாடல்களில் நியூரல் இன்ஜினில் (Neural Engine) அதிக கோர்கள் (cores) சேர்க்கப்பட உள்ளன. இந்த நியூரல் இன்ஜின், செயற்கை நுண்ணறிவு (AI) பணிகளைச் செயலாக்குவதற்குப் பயன்படுகிறது. தற்போதைய விஷன் ப்ரோவில் 16 கோர் கொண்ட நியூரல் இன்ஜின் உள்ளது. AI மூலம் படங்களையும், அப்ளிகேஷன்களையும் சிக்கலான விர்ச்சுவல் சூழலில் நிகழ்நேரத்தில் செயலாக்க இந்தச் செயல்திறன் மேம்பாடுகள் மிகவும் முக்கியமானவை.விஷன் ப்ரோவின் கனமான எடை மற்றும் அதன் ஸ்ட்ராப் வடிவமைப்பு குறித்துப் பயனர்களிடையே சில குறைகள் இருந்தன. இதை நிவர்த்தி செய்ய, ஆப்பிள் நிறுவனம் புதிய ஸ்ட்ராப் ப்ரோட்டோடைப்களை உருவாக்கி வருகிறது. இந்த புதிய ஸ்ட்ராப் கழுத்து அழுத்தத்தை குறைத்து, சாதனத்தை நீண்ட நேரம் வசதியாக அணிய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விஷன் ப்ரோவின் சமீபத்திய பதிப்பு தலையின் பின்புறம் மற்றும் தலைக்கு மேலே செல்லும் 2 ஸ்ட்ராப் விருப்பங்களுடன் வருகிறது. சாதனத்தின் எடையைக் குறைக்க ஆப்பிள் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.விஷன் ப்ரோ, அறிமுகமானபோது ஸ்மார்ட்போன்கள் அல்லது அணியக்கூடிய சாதனங்களுக்கு ஆப்பிள் கொடுத்த முக்கியத்துவத்தைப் பெறவில்லை. பிரத்யேக அப்ளிகேஷன்களின் பற்றாக்குறையும் ஒரு காரணமாக இருந்தது. ஆப்பிள் இதுவரை சில லட்சக்கணக்கான விஷன் ப்ரோக்களை மட்டுமே விற்றுள்ளதுடன், புதிய சந்தைகளில் படிப்படியாகவே விரிவடைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன