Connect with us

பொழுதுபோக்கு

சண்டை வருவது வழக்கம் தான்; ஆனா இதுக்கு வேற காரணம்: ப்ரமோஷன் வராத ராபர்ட் குறித்து வனிதா தகவல்!

Published

on

Robert and Vanitha

Loading

சண்டை வருவது வழக்கம் தான்; ஆனா இதுக்கு வேற காரணம்: ப்ரமோஷன் வராத ராபர்ட் குறித்து வனிதா தகவல்!

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறியப்பட்ட வனிதா விஜயகுமார், சமீபத்தில் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். இந்தப் படம் கடந்த ஜூலை 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில்,  செஃப் தாமு, பாத்திமா பாபு, கிரண், ஸ்ரீமான், ஆர்த்தி, கணேஷ் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.இப்படத்தின் ப்ரொமோஷனுக்காக வனிதா விஜயகுமார் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். பல்வேறு நேர்காணல்கள், பிரபலங்கள் மூலமாக டிரெய்லர் வெளியிடுவது என்று நிறைய பணிகளை மேற்கொண்டு படத்திற்கு விளம்பரம் செய்தார்.எனினும் இப்படத்தின் கதாநாயகன் ராபர்ட், எந்தவொரு ப்ரொமோஷன் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. குறிப்பாக, வனிதாவிற்கும், ராபர்டுக்கும் ஏற்பட்ட சண்டையின் காரணமாக ப்ரொமோஷனில் அவர் கலந்து கொள்ளவில்லை என்று பேசப்பட்டது.இந்நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதன்முறையாக வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக கலாட்டா யூடியூப் சேனலுடனான நேர்காணலின் போது அவர் பதிலளித்துள்ளார்.அதன்படி, “ராபர்ட்டுக்கும், எனக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கம் தான். இத்திரைப்படம் எடுக்கும் போதும் கூட இருவருக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தன.எங்கள் உறவில் இது ஒரு பகுதியாக அமைந்தது. ஆனால், இப்படத்தின் ப்ரொமோஷனுக்கு ராபர்ட் வராததற்கு அது காரணம் இல்லை. தற்போது, ராபர்ட் பிஸியாக இருக்கிறார். மேலும், அவரைச் சார்ந்த சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் அவர் ப்ரொமோஷன்களுக்கு வரவில்லை” என்று வனிதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன