சினிமா
கூப்டு வச்சி அங்கப்படுத்திட்டீங்க!! அனுஷ்கா முன் வருத்தப்பட்ட பிரபல நடிகர்..

கூப்டு வச்சி அங்கப்படுத்திட்டீங்க!! அனுஷ்கா முன் வருத்தப்பட்ட பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் கார்த்தி, நடிகை அனுஷ்காவுடன் இணைந்து, அலெக்ஸ் பாண்டியன் என்ற படத்தில் நடித்திருந்தார். அப்படத்தினை இயக்குநர் சுராஜ் 2013ல் இயக்கி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கார்த்தி, அனுஷ்கா பங்கேற்றனர்.அப்போது தொகுப்பாளினி டிடி, விஜய், விக்ரம், சூர்யா என்று ஆப்ஷன் கொடுத்து, ஸ்மார்ட் லுக்கிங் ஹீரோ யார் என்று அனுஷ்காவிடம் கேட்டுள்ளார்.அதற்கு அனுஷ்கா, இதில் கார்த்தி இல்லையா? என்று கேட்க, ச்சே அப்போ நான் ஸ்மார்ட் லெவலில் இல்லையா? கூப்பிட்டு வச்சி அசிங்கப்படுத்திட்டீண்ட்க்க என்று கார்த்தி சொல்லியுள்ளார்.இதை கேட்ட டிடி நீங்க எப்பவுமே ஸ்மார்ட், இவங்ககிட்ட போட்டு வாங்கணும், அதுக்காகத்தான் இப்படி கேட்டதாக கூறியிருக்கிறார். அப்படி ஆப்ஷன் வச்சாலும் நீங்க தான் ஸ்மார்ட்னு சொல்றாங்க என்று டிடி சொல்ல, விக்ரம் தான் என்று அனுஷ்கா கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.