இலங்கை
அரியாலை பொதுச்சுகாதாரப் பிரிவில் விலங்கு விசர்நோய்த் தடுப்பூசி ஏற்றல்!

அரியாலை பொதுச்சுகாதாரப் பிரிவில் விலங்கு விசர்நோய்த் தடுப்பூசி ஏற்றல்!
அரியாலை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட வளர்ப்பு நாய்களுக்கான விலங்கு விசர்நோய் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது. ஒரு நாய்க்கான தடுப்பூசிக்கட்டணமாக 100 ரூபா அறவிடப்படும். அதன் பிரகாரம் இன்று திங்கட்கிழமை புங்கன்குளம் வீதி அரியாலை சனசமூகநிலையத்தில் மு.ப 9 மணி தொடக்கம் மு.ப 11 வரையும், பென்ரிகோஸ் லேனில் மு.ப 11 மணி தொடக்கம் பி.ப. 1 மணி வரையும், கண்டி வீதி தியாகராசா பதிப்பகத்தில் பி.ப. 2.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையும் தடுப்பூசி ஏற்றப்படும்.
நாளை செவ்வாய்க்கிழமை கண்டி வீதி சரஸ்வதி சனசமூக நிலையத்தில் மு.ப 9 மணி தொடக்கம் மு.ப 11 மணிவரையும், ஏ.வி. ரோட் மிருக வைத்திய நிலையத்தில் மு.ப. 11 மணி தொடக்கம் பி.ப. 1மணி வரையும், இலந்தைக்குளம் பிரப்பங்குளம் அம்மன் கோவிலடியில் பி.ப. 2.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையும் தடுப்பூசி ஏற்றப்படும்.
நாளை மறுதினம் புதன்கிழமை கலைமகள் சனசமூக நிலையத்தில் மு.ப. 9 மணி தொடக்கம் மு.ப 11 மணிவரையும், காந்தி சனசமூக நிலையத்தில் மு.ப. 11 மணி தொடக்கம் பி.ப 1 மணி வரையும், அருணோதயா சனசமூக நிலையத்தில் பி.ப. 2.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையும் தடுப்பூசி ஏற்றப்படும்.
17ஆம் திகதி திருமகள் சனசமூக நிலையத்தில் மு.ப 9 மணி தொடக்கம் மு.ப 11 மணிவரையும், மலர்மகள் சனசமூகநிலையத்தில் மு.ப 11 மணி தொடக்கம் பி.ப 1 மணி வரையும், நாயன்மார்கட்டு செம்மணி வீதி பாரதி சனசமூக நிலையத்தில் பி.ப 2.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையும் தடுப்பூசி ஏற்றப்படும்.
18ஆம் திகதி பேச்சி அம்மன் கோவிலடி அம்பாள் சனசமூக நிலையத்தில் மு.ப 9 மணி தொடக்கம் மு.ப 11 மணி வரையும், நாயன்மார்கட்டு மகேஸ்வரி பாடசாலை அருகில் மு.ப 11 மணி தொடக்கம் பி.ப 1 மணி வரையும், பொன்னம்பலம் வீதி கலைவானி சனசமூக நிலையத்தில் பி.ப 2.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையும் தடுப்பூசி ஏற்றப்படும்.
21 ஆம் திகதி முள்ளி வீதியில் மு.ப 9 மணி தொடக்கம் மு.ப 11 மணி வரையும். ஆள்காட்டி வீதி அருளம்பதி சந்தியில் மு.ப 11 மணி தொடக்கம் பி.ப 1 மணி வரையும், இராஜேஸ்வரி வீதியில் பி.ப 2.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையும் தடுப்பூசி ஏற்றப்படும்.
22 ஆம் திகதி கனகரட்னம் வீதி நாவலர் வீதிச் சந்தியில் மு.ப 9 மணி தொடக்கம் மு.ப 11 மணிவரையும். கனகரட்னம் மகா வித்தியாலயம் அருகில் மு.ப 11 மணி தொடக்கம் பி.ப 1 மணி வரை யும்.பாரதி வீதி முதலியார் வீதிச் சந்தியில் பி.ப 2.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையும் தடுப்பூசி ஏற்றப்படும்.
23 ஆம் திகதி கச்சேரி நல்லூர் வீதி றக்கா வீதிச் சந்தி மு.ப 9 மணிதொடக்கம் மு.ப 11 மணிவரையும், பேரின்பநாயகம் வீதியில் மு.ப 11 மணி தொடக்கம் மு.ப 1 மணிவரையும், கச் சேரி நல்லூர் வீதி நாவலர் வீதிச் சந்தியில் பி.ப 2.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையும் தடுப்பூசி ஏற்றப்படும்.
24 ஆம் திகதி சாஸ்திரி யார் வீதியில் மு.ப 9 மணி தொடக்கம் மு.ப 11 மணிவரையும், சந்தனமாதா ஒழுங்கையில் மு.ப 11 மணி தொடக்கம் பி.ப 1 மணி வரையும். கச்சேரி கிழக்கு புகையிரதப் பாதை ஒழுங்கையில் பி.ப 2.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரையும் தடுப்பூசி ஏற்றப்படும்.