இலங்கை
மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் முதல்முறை 9A சித்தி!

மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் முதல்முறை 9A சித்தி!
க.பொத.சாதாரண தரப் பரீட்சை வெளியாகிய நிலையில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் முதல்முறை மாணவி ஒருவர் 9A சித்தியைப் பெற்றுள்ளார்.
மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் கல்விகற்று வந்த ஜ.நிரோஜா என்ற மாணவியே 9A பெறுபேற்றைப் பெற்றுள்ளார்.
கிராமப்புறத்தில் உள்ள மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயம் பல காலங்களாக பொருளாதாரம் குன்றிய நிலையில் காணப்பட்டு வருகின்ற நிலையிலேயே குறித்த மாணவி 9A சித்தியைப் பெற்றுள்ளார்.
பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A பெற்று சாதனை படைத்துள்ளதுடன் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
9A பெற்ற வரலாற்றுச் சாதனை படைத்த மாணவிக்கு மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய அதிபர் பா.பாலசுப்பிரமணியம் ஊக்குவிப்புத் தொகையாக ஒருதொகை பணப்பரிசில் வழங்கி கௌரவித்தார்.
மேலும், குறித்த பாடசாலை மாணவர்களான த.பிரணவி 7ஏ 2பி, பு.தேனுஜன் 6ஏ பி 2சி, செ.ஆதீசன் ஏ 3பி 4சி எஸ், சி.சியானா ஏ 4பி 3சி எஸ், ஜீ.கலையரசன் ஏ 2பி 3சி 2எஸ் பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் குடும்பத்தினருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.