இலங்கை
வெள்ள ஈயிற்கு முடிவு – தேசிய செயற்றிட்டம்!

வெள்ள ஈயிற்கு முடிவு – தேசிய செயற்றிட்டம்!
இருவார கால தீவிர தேசிய கள செயற்பாடு – 2025′ என்னும் தொனிப்பொருளில் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்றிட்டம், கச்சாயில் இன்று (14) ஆரம்பமானது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பங்கேற்புடன் வெள்ள ஈயைக் கட்டுப்படுத்துவது தொடர்பான திட்டங்கள் முன்வைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டன.
குறித்த நிகழ்வில், யாழ்.மாவட்டச் செயலர் ம.பிரதீபன், தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜயக்கொடி, தென்னை பயிர்ச் செய்கை சபையின் பொதுமுகாமையாளர் விஜயசிங்க, தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சு.செந்தில்குமரன், விவசாய பிரதி மாகாணப் பணிப்பாளர் திருமதி எஸ்.அஞ்சனாதேவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.