Connect with us

சினிமா

சோகம் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு! இயக்குநர்பா.ரஞ்சித் மீது 3பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Published

on

Loading

சோகம் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு! இயக்குநர்பா.ரஞ்சித் மீது 3பிரிவுகளில் வழக்குப்பதிவு!

நாகை மாவட்டம் கீழ்வேளூர், வெண்மணி, விழுந்தமாவடி மற்றும் காரைமேடு பகுதிகளில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விழுந்தமாவடி பகுதியில் நடைபெற்ற முக்கியமான கார் சேஸிங் காட்சியின் படப்பிடிப்பு வேதனையான முடிவை ஏற்படுத்தியது.  வேகமாக பறந்து வந்து கீழே விழும் காட்சியில், 52 வயதான சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் ஈடுபட்டார்.படக்காட்சி எடுக்கும் நேரத்தில், கார் மேலே பறந்து அவர் அதிலிருந்தே கீழே விழும் போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தவர் காருக்குள் சிக்கி மயங்கி கிடந்தார். இதைப் பார்த்த இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் குழுவினர் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவ பரிசோதனையில் மோகன்ராஜ் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.இந்த துயர சம்பவத்தைக் தொடர்ந்து, ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்த விவகாரத்தில், இயக்குநர் பா.ரஞ்சித் மீது காவல்துறையால்  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன. அலட்சியம், பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறைபாடு உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன