இலங்கை
மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் அனர்த்தத்தால் பாதிக்கப்படும் மக்களுக்காக உதவி கோரல்

மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் அனர்த்தத்தால் பாதிக்கப்படும் மக்களுக்காக உதவி கோரல்
தற்போது இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள தொடர் மழை காரணமாக பல குளங்களின்நீர்மட்டம் நிரம்பியுள்ளதனால் அதன் வான் கதவுகள் திறக்கப்படுவதனால் இந்நீர்பெருக்கு மக்கள் குடியிருப்பை உருக்குலைத்து
தாக்கி வருகின்றது .
இவ்வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்படுவதனால் பல கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளது.
பல இடங்களுக்கு போக்குவரத்து வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் இடம்பெயர்ந்துள்ள மக்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கும் நடவடிக்கை நடந்து கொண்டிருக்கின்றது.
நாட்டின் பொருட்களின் விலையேற்றத்தினாலும் பொருளாதாரப் பிரச்சினையினாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் உடுத்த உடையுடன் தங்களது இடத்தை விட்டு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
தங்களது ஜீவனோபாயமான தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன கால்நடைகளும் குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே இவ்வாறு பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் செயற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை இறங்கி செயல்பட்டு வருகின்றது.
இம்மக்களுக்கு உடனடி உதவியை தொடர்ந்தும் வழங்குவதற்கு பேரவையிடம் போதுமான நிதி இல்லை.
இதனால் எமது நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து சென்றுள்ள மேலைத்தேய நாடுகளில் வசிக்கும் எமது உறவுகள் மற்றும் அவர்களது அமைப்புக்கள் மற்றும் மேலைத்தேய நாட்டில் உள்ள இந்து ஆலயங்களிடம் உதவி கோருகின்றது.
இவ்வுதவியை பணமாகவோ அல்லது பொருளாகவோ வழங்கலாம். யாவற்றிற்கும் பற்றுச்சீட்டும், நன்றிநவிலலும் வழங்கப்படும்.
உதவுபவர்கள் அல்லது அமைப்பு , ஆலயம் என்பவற்றின் பெயரில் பதாதைகள் போடப்பட்டு மக்களுக்கு தெளிவு படுத்தியே உதவிகள் வழங்கப்படும் பின்னர் உதவி வழங்கியதற்கான புகைப்படங்கள் உட்பட சகல ஆவணங்களும் அனுப்பப்படும்.
அத்துடன் ஊடகங்கள் மூலமும் தங்கள் உதவிகள் வெளிப்படுத்தப்படும்.
உதவியை வழங்குபவர் தங்களது தொலைபேசி இலக்கம் மற்றும் பெயர் விவரங்களை வழங்கி உதவுதல் அவசியம் .
நிதியாக வழங்குவதனால் கீழ்வரும் வங்கி மூலம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை கணக்கில் வழங்கலாம்.
பொருள்ரீதியாக உதவிவழங்குவதானால் பேரவை முக்கியஸ்தர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உதவிகளை வழங்க முடியும்.
பாதிக்கப்படும் உறவுகளுக்காக உங்களிடம் உதவியை அன்பாக கோருகின்றோம்.
சீனித்தம்பி யோகேஸ்வரன் ( தலைவர் )
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை
( முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் )
வங்கி விபரம் Bank Details__
கணக்கு:- மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை
Federation of Young Men’s Hindu Association
(Registration HA/04/BT/216)
Bank :- COMMERCIAL BANK
Branch :- Batticaloa Branch
Bank Account No
:- 110 50 40 264
Swift code :- CCEYLKLX
Bank code :- 70 56- 105
நன்றி
தொடர்புகள்
• சீ.யோகேஸ்வரன்- தலைவர் : Tp 0094 776034559
EMAIL:- yoheswaran.mp@gmail.com
வாழைச்சேனை
• சா. மதிசுதன் – செயலாளர் :- TP 0094774445128
கிரான்குளம்
• ந.புவனசுந்தரம்-
பொருளாளர்:- TP 0094773940583
செட்டிபாளயம்
மேலுள்ள தொலைபேசி இலக்கங்களில் Whatsapp தொடர்புகொள்ளலும் இணைக்கப்பட்டுள்ளன.