இலங்கை
புலிகளின் குரல் வானொலி அறிவிப்பாளர் காலமானார்

புலிகளின் குரல் வானொலி அறிவிப்பாளர் காலமானார்
விடுதலைப் புலிகள் அமைப்பின் ‘புலிகளின் குரல்’ வானொலியின் பிரபல அறிவிப்பாளராகச் செயற்பட்ட, கிளிநொச்சி – வட்டக்ச்சியை சேந்த சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார்.
1990 ஆம் ஆண்டில் புலிகளின் வானொலி தொடங்கி முதலாவது செய்தி ஒலிபரப்பாகியபோது “புலிகளின்குரல் – செய்திகள் வாசிப்பவர் சத்தியா” என்று செய்தி வாசித்தவர் அவர்.
புலிகளின் குரல் வானொலியில் செய்தி ஆசிரியராகவும், செய்தி வாசிப்பாளராகவும் 2003 ஆம் ஆண்டு வரையில் அவர் செயற்பட்டிருந்தார்.
அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கிக் காயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் சிகிற்சை பலனின்றி நேற்று (14) அவர் காலமானார்.