சினிமா
நிறைய செருப்படி..தப்பானவர காதலிச்சி ஏமாந்துட்டேன்!! பிக்பாஸ் நடிகை அன்ஷிதா எமோஷ்னல்..

நிறைய செருப்படி..தப்பானவர காதலிச்சி ஏமாந்துட்டேன்!! பிக்பாஸ் நடிகை அன்ஷிதா எமோஷ்னல்..
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமாகி கடந்த பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை அன்ஷிதா அக்பர்ஷா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், சொந்த வீடு வாங்கியது, காதல்ம் பிரேக் அப் என பல விஷயங்களை பற்றி பகிர்ந்துள்ளார்.அதில், என் அம்மா பிறந்ததில் இருந்து சொந்த வீட்டில் இருந்தது இல்லை. அவர்களுக்காக ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது என் ஆசை. அதேபோல் இதுநாள் வரை அம்மாவிற்கு சொந்த வீட்டில் இருக்க வெண்டும் என்ற ஆசைக்காகத்தான் நான் கஷ்டப்பட்டு சொந்த வீட்டை வாங்கி, அதற்கு Gulu Heaven-ன்னு பேர் வைத்திருக்கிறேன்.அம்மா உடம்பு முடியாமல் இருந்தபோது கூட, அன்ஷிமா, நான் இப்போது சாகக்கூடாது, நீ வீடு வாங்கியப்பின் அந்த வீட்டில் ஒருநாளாவது வாழ்ந்தப்பின் தான் சாக வேண்டும் என்றார். அவருடைய கனவாகவே இருந்தது வீடு, அதைத்தான் நான் இப்போது நிறைவேற்றியிருக்கிறேன், இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார் அன்ஷிதா.மேலும், நான் காதலித்து பல ஏமாற்றத்தையும், பல அவமானங்களையும் சந்தித்துவிட்டு, இனிமேல் காதல் என்றால் தாவுடா தாவுடா என வடிவேலு சார் பாணியில் தான் சென்றுவிடுகிறேன். இப்போது ஆண்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது. ஏனென்றால் அவ்வளவு செருப்படி வாங்கியிருக்கிறேன்.அதற்காக காதலிப்பது தவறு என்று சொல்லவில்லை, நான் காதலித்த ஆள் தான் தப்பானவர். எனக்கு உண்மையாக இருந்தால், அவர்களுக்காக உயிரையும் கொடுப்பேன், ஆனால் அதுபோல் யாரும் செய்வதில்லை. இனிமேல் எந்த பிரச்சனையிலும் நான் சென்று மாட்டிக்கொள்ளமாட்டேன்.இப்போது நான் நினைப்பது, அம்மா, என் அண்ணன் அவர்கள் இருவர் தான் என் குழந்தைகள். அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால், அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. என் எண்ணம் முழுக்க இவர்கள் இரண்டுபேர் மீது தான் இருக்கிறது என்று அன்ஷிதா எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.