சினிமா
பெரியளவில் புரொமோஷன் செய்தும் படம் ஓடலயே.. பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த Mrs & Mr.!

பெரியளவில் புரொமோஷன் செய்தும் படம் ஓடலயே.. பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த Mrs & Mr.!
தமிழ் சினிமாவில் எப்போதும் சர்ச்சைகளுக்கும், திடீர் சப்ரைஸ்களுக்கும் பெயர் போனவர் வனிதா விஜயகுமார். சமீப காலமாக சினிமா மேடையில் அவர் காட்டிய உற்சாகமும், இணையவழி தாக்கமும் தவிர்க்க முடியாதவை. ஆனால், இந்த முறை அவர் தனது முன்னாள் காதலருடன் இணைந்து நடித்த புதிய திரைப்படம் ‘Mrs & Mr’, எதிர்பாராத வகையில் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்துள்ளதென்பது தற்போது திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.2025 ஜூலை 11ம் தேதி திரைக்கு வந்த இந்த படம், வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குநர் ராபர்ட் இணைந்து நடித்த காதல் கலந்த குடும்பக் கதையாகவே காணப்பட்டது.இந்தக் கதையின் சிறப்பம்சம், real life-ல் காதலித்துக் கொண்ட ஜோடி தான் கதாநாயகன், கதாநாயகியாக திரையில் நடித்திருந்தனர். இது தான் ரசிகர்களை ஈர்க்கும் முக்கிய புள்ளியாக அமைந்திருந்தது.திரைப்படம் வெளியாகும் வரை, வனிதா தனது YouTube சேனல், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றின் மூலமாக மிகப் பெரிய அளவில் படத்தை பிரச்சாரம் செய்தார்.ஆனால், திரைப்படம் வெளியான நாளிலிருந்து தியட்டர்களில் குறைந்தளவிலான மக்கள் சென்றதையே பார்க்கக் கூடியதாக உள்ளது. அந்தவகையில், முதல் வார முடிவில், படம் சில லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.தற்போதைக்கு வனிதா இந்த தோல்வி குறித்து எந்த கருத்துகளும் பேசவில்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் சில ரசிகர்கள் இந்தப் படம் குறித்து நெகட்டிவ் விமர்சனங்களை எழுப்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.