Connect with us

இலங்கை

மன். இடைத்தங்கல் முகாம்களில் தங்கி வாழும் மக்களை சந்தித்த சிறுவர் விவகார அமைச்சர்!

Published

on

Loading

மன். இடைத்தங்கல் முகாம்களில் தங்கி வாழும் மக்களை சந்தித்த சிறுவர் விவகார அமைச்சர்!

மன்னாரில் வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்து தொடர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் பாதுகாப்பு மையங்களில் தங்கி வாழும் மக்களை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையிலான குழுவினர் சந்தித்தித்து அத்தியாவசிய பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.

நேற்று மன்னாருக்கு வருகை தந்திருந்த இக்குழுவில் மகளிர் மற்றும் சிறுவர் விவகாரபிரதி அமைச்சர் மருத்துவக் கலாநிதி நாமல் லக்ஸமன , நாடாளுமன்ற உறுப்பினர் சமன்வெளி குணசிங்க அமைச்சின் செயலாளர்கள் உட்பட இவர்களுடன் மன்னார் நகர் பிரதேச செயலர் எம் பிரதீப் மற்றும் மன்னார் மாவட்ட செயலக காணி மேலதிக செயலர் ஸ்ரீஸ்கந்தகுமார் ஆகியோரும் இணைந்து இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களை  மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் நிறுவனங்களால் கொண்டு வரப்பட்ட  மருத்துவ மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து தாழ்வுபாட்டு வீதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் பெண்கள் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது.

Advertisement

இதன்போது மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மக்கள் மத்தியில் உரையாற்றும்போது;
அரசு பொறுப்பேற்றதுடன் மக்களுக்கு நிறைய அபிவிருத்தி வேலைகளை செய்ய வேண்டும் என்ற அபிலாசையில் இருந்து வருகின்றது.

தற்பொழுதுள்ள காலநிலை மாற்றம் காரணமாக எமது மக்கள் வெள்ளத்தினால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் இவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

பாதிப்டைந்துள்ள மக்களின் வாழ்வை நாம் மீளக் கட்டியெழுப்ப வேண்டும்.  அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் இதற்கு துணைபுரிய வேண்டிய அவசியம் உண்டு.

Advertisement

பாதிப்டைந்துள்ள நீங்கள் மீளக்குடியேற பிரதேச செயலகங்கள், மாவட்ட செயலகம் மற்றும் அணைத்து அமைச்சுக்களும் யாவரும் ஒன்றிணைந்து செயல்பட இருக்கின்றோம்.

பாதைகள் உங்கள் இல்லங்கள் மற்றும் உங்கள் அன்றாட உணவு விடயங்கள், சுகாதார தேவைகள் போன்றவற்றில் இந்த அரசு கவனம் செலுத்தி தீவிரமாக செயற்படுத்தி வருகின்றது.

இதேவேளை, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஊடாக சுகாதார தேவைகள் உணவு பொதிகள் வழங்கப்படுதுடன் ஏனைய நிவாரணங்களும் வழங்கப்படுகின்றன. பெண்களுக்கு சிறுவர்களுக்கு தேவையான சுகாதார தேவைகளையும் கண்காணித்து பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் இதற்கு துணையாக ஜெயிக்கா நிறுவனம் ,  சாக் நிறுவனம் மற்றும் யு.என்.டி.பி நிறுவனங்கள் உதவி புரிகின்றன. இதை வழங்குவதற்காகவே நாங்கள் மன்னாருக்கு வருகை தந்து செயற்படுத்துகின்றோம்- என்றார். (ச)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன