இலங்கை
வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு விஷேட செய்தி!

வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு விஷேட செய்தி!
வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதுப்பணி குழுக்கள்/அலுவலகங்கள் மூலம் இணையவழி மூலம் கடவுச்சீட்டுக்களை விண்ணப்பிப்பதற்கான கருத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையர்கள் வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதுப்பணிக் குழுக்கள்/அலுவலகங்கள் மூலம் நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டுக்களை விண்ணப்பிப்பதற்கான முறைமையை துரிதப்படுத்துவதற்காக குறித்த செயற்பாடுகளை நிகழ்நிலையாக மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு பெறுதல் தொடர்பான முன்மொழிவு புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்புக்கு (IOM) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கருத்திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம், வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் டிஜிற்றல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி துரிதமாகவும், இலகுவாகவும் கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த கருத்திட்டத்தை இவ்வாண்டு தொடக்கம் அமுல்ப்படுத்துவதற்காக வௌிவிவகார, வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர், பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.