Connect with us

சினிமா

சாய் வாலா பிசினஸ் டூ டீ தூள் விளம்பரம்.. சரிய தொடங்குகிறதா நயன்தாராவின் சாம்ராஜ்யம்?

Published

on

Loading

சாய் வாலா பிசினஸ் டூ டீ தூள் விளம்பரம்.. சரிய தொடங்குகிறதா நயன்தாராவின் சாம்ராஜ்யம்?

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என கண்ணதாசன் எழுதியிருப்பார். அது மாதிரி நயன்தாரா ஒரு இடத்தில் இருக்கும் வரை அவருடைய மதிப்பு பெரிய அளவில் இருந்தது. படம் நடிப்பார் அந்த படம் ரிலீஸ் ஆகும் அவ்வளவுதான் நயன்தாராவை பார்க்க முடியும்.

அதை தாண்டி அவர் எங்கே இருக்கிறார் இப்ப என்ன பண்ணிக் கொண்டிருக்கிறார் என யாருக்குமே தெரியாது. சமூக வலைத்தளத்தில் எந்த அக்கவுண்டும் இல்லாமலும் இருந்தது. அதுவரை லேடி சூப்பர் ஸ்டார் என்ற ஒரு உச்சம் நன்றாகத்தான் இருந்தது.

Advertisement

ஆனால் எப்போது மக்களின் அன்றாட வாழ்க்கையில் அவரை சாதாரணமாக பார்க்க முடிந்ததோ அப்போவே கொஞ்சம் நயன்தாரா டல் அடிக்க ஆரம்பித்து விட்டார். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை.

அதிலும் முக்கியமாக பெரிய ஹீரோக்கள் யாரும் தன்னுடைய புது படங்களில் நயன்தாராவை ஒப்பந்தம் செய்யவில்லை. இருந்தாலும் நயன்தாரா என்ற பெயருக்கு பெரிய அளவில் மரியாதை இருந்தது. தேவையில்லாமல் தனுஷ் பிரச்சனையில் கொஞ்சம் அதிகமாக தலையிட்டு மக்கள் தங்கள் வாய்க்கு வந்ததெல்லாம் பேசும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.

அதிலும் டாக்குமென்ட்ரி படத்தின் ரிலீஸுக்கு பிறகு விக்னேஷ் சிவன் மீதும் ஒருவித சலிப்பு வர ஆரம்பித்திருந்தது. அதிலும் யூட்யூப் சேனல் ஒன்றில் இயக்குனர்களின் ரவுண்டு டேபிள் மாநாட்டில் அவர் பங்கெடுத்தது பெரிய அளவில் பேசுபொருளானது.

Advertisement

என்ன காரணமோ தெரியவில்லை திடீரென தன்னுடைய ட்விட்டர் அக்கவுண்டையும் டிஆக்டிவேட் செய்து விட்டார். நேற்று இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க திடீரென இன்று சமூக வலைத்தளம் பக்கம் போனால் நயன்தாரா மாதவனுக்கு டீ போட்டுக் கொண்டிருக்கிறார்.

என்ன இது ஏதாவது படத்தோட பிரமோஷனா இருக்குமோ எனப் பார்த்தால் அதுதான் இல்லை நயன்தாரா டீ தூள் விளம்பரத்தில் நடித்திருக்கிறார். பிரபல டீ தூள் விளம்பரம் ஒன்றில் நயன்தாரா மற்றும் மாதவன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் இணைந்து டெஸ்ட் படத்தில் நடித்து வருவதால் ஒருவேளை இந்த கெமிஸ்ட்ரியில் ஒரு விளம்பரம் உருவாக்கி இருக்கிறார்களா என தெரியவில்லை. நயன்தாரா முதன்முதலில் ஆரம்பித்த பிசினஸ் என்றால் அது சாய்வாலா நிறுவனத்தின் மீது தன்னுடைய முதலீடு போட்டதுதான்.

Advertisement

அதை தொடர்ந்து தான் லிப் பாம் காஸ்மெட்டிக்ஸ் எல்லாம். அப்படி இருக்கும் பட்சத்தில் தான் நடித்த படங்களின் பிராமோஷனுக்கு கூட வராத நயன்தாரா இப்போ டீ தூள் விளம்பரத்திற்கு வந்து விட்டாரே. அவருடைய மார்க்கெட் சரிய தொடங்குவதற்கு இதுதான் சரியான சாட்சி என இணையவாசிகள் பேசி வருகிறார்கள்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன