பொழுதுபோக்கு
இமய மலை கிளம்பிய ரஜினி… கெஞ்சிய அண்ணாமலை டைரக்டர்; ஒரே நாளில் உருவான இந்த மாஸ் பாட்டு!

இமய மலை கிளம்பிய ரஜினி… கெஞ்சிய அண்ணாமலை டைரக்டர்; ஒரே நாளில் உருவான இந்த மாஸ் பாட்டு!
அண்ணாமலை திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளியாகி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற ஒரு தமிழ் ஆக்ஷன் படமாகும். இதை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இந்த படம் ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.”வெற்றி நிச்சயம் வேத சக்தியும்” போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை. இப்பாடலின் படப்பிடிப்பு, ரஜினி இமயமலை கிளம்ப இருந்த நிலையில், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கெஞ்சி ஒருநாள் அனுமதி பெற்று எடுக்கப்பட்டதாகவும் அதன் சூட்டிங் நடந்தது குறித்தும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தமிழ்நாடு நௌ யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ‘அண்ணாமலை’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்ட நிலையில், “வெற்றி நிச்சயம் வேத சக்தியும்” பாடல் ஒரு மாஸ் ஹிட் ஆகும் என இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா நம்பினார். தேவா இசையமைத்த இப்பாடல் சிறப்பாக இருந்தாலும், ரஜினிகாந்தின் ஸ்டைல் மற்றும் பாடல் வரிகளை அவர் சரியாக உச்சரிக்க வேண்டும் என்பதில் இயக்குனர் உறுதியாக இருந்தார்.இதற்காக, படம் முடிந்துவிட்ட போதிலும், ரஜினியிடம் மீண்டும் அனுமதி பெற்று ஒருநாள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டார். ஆனால், ரஜினியோ படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இமயமலைக்குக் கிளம்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் கிருஷ்ணா, ரஜினியிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாராம். “சார், எனக்கு ஒரே ஒரு நாள் மட்டும் நேரம் கொடுங்கள். அதற்குள் நான் அனைத்தையும் சரி செய்துவிடுகிறேன்” என்று கேட்டிருக்கிறார்.ரஜினியும் இயக்குனரின் கோரிக்கையை ஏற்று, அந்த ஒரு நாள் படப்பிடிப்பிற்கு சம்மதித்திருக்கிறார். அந்த ஒரே நாளில், அண்ணாமலை படத்தின் மாஸ் ஹிட் பாடலான “வெற்றி நிச்சயம் வேத சக்தியும்” பாடல்களில் சில சீன்கள் காட்சியாக்கப்பட்டது. அனிமேஷனில் கார்கள் எல்லாம் கொண்டுவரப்பட்டு சரியான லிப்ஸிங்குடன் படம் பிடிக்கப்பட்டது என்றார்.ரஜினியின் தனித்துவமான ஸ்டைல், அவரின் துல்லியமான வசன உச்சரிப்பு மற்றும் தேவா அவர்களின் அசத்தலான இசை ஆகியவை இணைந்து இப்பாடலை ஒரு மிகப்பெரிய வெற்றிப் பாடலாக மாற்றின. இன்றும் ரஜினி ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் முக்கிய இடத்தை இப்பாடல் பிடித்துள்ளது.