டி.வி
சீரியல் நடிகை வைஷாலிக்கு வளைகாப்பு; சீர் கொண்டு வந்த சின்னத்திரை நடிகர்கள்; வைரல் வீடியோ

சீரியல் நடிகை வைஷாலிக்கு வளைகாப்பு; சீர் கொண்டு வந்த சின்னத்திரை நடிகர்கள்; வைரல் வீடியோ
பிரபல சின்னத்திரை நடிகை வைஷாலி தனிகா, சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அவருக்கு சவளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியின் பிரபல நடிகர் நாஞ்சில் விஜயன், சீர் கொண்டு வந்துள்ளார்.’முத்தழகு’ சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த வைஷாலி, ‘மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியிலும் தனது தனித்துவமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். சத்யதேவ் என்பவரை திருமணம் செய்துகொண்ட வைஷாலி சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த பதிவில், “நாங்கள் இவ்வளவு நாள் ஒரு ரகசியத்தை வைத்திருந்தோம், ஆனால் இப்போது நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். ஒரு குட்டி தேவதை விரைவில் வரவிருக்கிறாள் என்று பதிவிட்டிருந்தார்.மேலும், நாங்கள் எங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குள் நுழைகிறோம், மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறோம்! இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் குட்டி தேவதைக்கும் உங்கள் அன்பு மற்றும் ஆசீர்வாதங்கள் தேவை” என்று உருக்கமாகப் பதிவிட்டிருந்தார். இந்த அறிவிப்பு இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், நெட்டிசன்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதனிடையே தற்போது வைஷாலிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.A post shared by NANJIL VIJAYAN (@nanjilvijayan)மேலும் இந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு, நடிகர் நாஞ்சில் விஜயன் இந்திரஜா ரோபோ சங்கர், அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் சீர் கொண்டு வந்துள்ள புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. சக நடிகை ஒருவரின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு, சக நடிகர் ஒருவர் சீர் கொண்ட வந்த நிகழ்வு சின்னத்திரை வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில், பல சின்னத்திரை நட்சத்தரங்கள் பங்கேற்றிருந்தார்.