இலங்கை
மகளை கடித்த குரங்கு ; நீதி கேட்க சென்ற தந்தைக்கு நேர்ந்த கொடூரம்

மகளை கடித்த குரங்கு ; நீதி கேட்க சென்ற தந்தைக்கு நேர்ந்த கொடூரம்
செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த குரங்கு ஒன்று சிறுமியொருவரை கடித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.
மாத்தளை – யடவத்தை, துத்திரிபிட்டிய, டல்லேவாவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட குரங்கு உயிரிழந்தவர்களின் மகள்களை கடித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதில் குரங்கை வளர்த்து வந்த நபர், சிறுமியின் தந்தையை கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலை தொடர்பில் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.