இலங்கை
மூடப்படுகின்றது வட்டுவாகல் பாலம்: மாற்று பாதையை பாவிக்கவும்

மூடப்படுகின்றது வட்டுவாகல் பாலம்: மாற்று பாதையை பாவிக்கவும்
முல்லைதீவு நகரை இணைக்கும் வட்டுவாகல் பாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
வட்டுவாகல் பாலத்தில் ஏற்பட்டுள்ள சிறிய உடைவை சரிசெய்யும் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (16) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை வட்டுவாகல் பாலம் முற்றாக மூடப்படும்.
எனவே குறித்த உடைவின் திருத்த வேலைகள் நிறைவடையும் வரை புதுக்குடியிருப்பு முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் முல்லைத்தீவு ஊடாக பயணம் செய்வோர் மாற்றுப்பாதையாக, புதுக்குடியிருப்பு கேப்பாப்பிலவு வீதியை பயன்படுத்திக்கொள்ள கோரப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து சாரதிகளும் மற்றும் பயணிகளும் இந்த தகவலை கவனத்தில் கொண்டு மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோமென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, அறிவித்துள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை