சினிமா
33 வயதில் தாயான பிரபல பாலிவுட் நடிகை கியாரா.. குஷியில் ரசிகர்கள்

33 வயதில் தாயான பிரபல பாலிவுட் நடிகை கியாரா.. குஷியில் ரசிகர்கள்
பாலிவுட் சினிமாவில் கொண்டாடப்படும் டாப் நடிகைகளில் ஒருவர் நடிகை கியாரா அத்வானி.இவர் Fugly என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பின் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டார்.கடைசியாக கியாரா அத்வானி நடிப்பில் தெலுங்கில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் படம் வெளியாகி இருந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. கியாரா அத்வானி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, இந்த ஜோடி பெற்றோர்களாகியுள்ளனர்.அதாவது, கியாராவுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தம்பதியினருக்குத் திருமணமாகி இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் குழந்தை பிறந்துள்ளது.இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் கியாராவுக்கு சுகப்பிரசவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.