Connect with us

இலங்கை

சுகர் லெவல் எப்போதும் கட்டுக்குள் இருக்க ; இந்த விஷயங்களை கட்டாயம் செய்தே ஆக வேண்டும்

Published

on

Loading

சுகர் லெவல் எப்போதும் கட்டுக்குள் இருக்க ; இந்த விஷயங்களை கட்டாயம் செய்தே ஆக வேண்டும்

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

 சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவில்லை என்றால், கண்கள், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே சுகர் லெவலை கட்டுக்குள் வைத்திருக்க, உணவு முறையிலும் பழக்கத்திலும் கவனம் செலுத்துவது அவசியம்.

Advertisement

 உணவில் கவனம்: உணவில் நிறைய காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்ளவும். குறைந்த கிளைசிமிக் குறியீடு, குறைவாக கலோரிகள் அதிக நார் சத்து நிறைந்த உணவை சாப்பிடுங்கள்.

உடற்பயிற்சி: நீரிழிவு நோயாளிகள் வாரத்தில் 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதோடு, தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வதும் முக்கியம். எடையைக் கட்டுக்குள் வைத்திருந்தால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

சர்க்கரை அளவை கண்காணித்தல்: நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிப்பதோடு, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் ஆகியவற்றையும் சோதிக்க வேண்டும். நீரிழிவு அதிகமாக பாதிக்கும் கண்கள், சிறுநீரகம் கால்கள் ஆகியவற்றைப் வழக்கமாக பரிசோதிக்க வேண்டும்.

Advertisement

மருந்துகளை தவறாமல் உட்கொள்ளுதல்: மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஊசிகளை சரியான நேரத்தில் சரியான அளவில் எடுத்துக்கொள்வது அவசியம்.


மது அருந்துதல் அறவே கூடாது:
நீரிழிவு நோயாளிகள் மது அருந்துவதை மட்டுமல்லாது புகைபிடிப்பதையும் கைவிட வேண்டும். ஏனெனில் சர்க்கரை நோயால் ஏற்படும் இதய நோய் அபாயம் உள்ளிட்ட ஆபத்தை அதிகரிக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்: துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சர்ககரை நோயாளிகளின் எதிரிகள். அவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன