இந்தியா
ஏர் இந்தியா விபத்து: கடைசி நிமிட மர்மம்- பைலட் கட்டளையின்றி ஸ்விட்ச் அணைந்திருக்க முடியுமா?

ஏர் இந்தியா விபத்து: கடைசி நிமிட மர்மம்- பைலட் கட்டளையின்றி ஸ்விட்ச் அணைந்திருக்க முடியுமா?
கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா AI-171 விமானம் புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள்ளேயே விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர், அவர்களில் 241 பேர் விமானத்தில் இருந்தவர்கள். இந்த விபத்து குறித்து தீவிரமாக நடைபெற்று வரும் விசாரணையில், விமானத்தின் மின் மற்றும் மென்பொருள் கூறுகளில் ஏற்பட்ட தொடர் கோளாறுகள் மையப்புள்ளியாகி உள்ளன. குறிப்பாக, “கட்டளையிடப்படாத மாற்றம்” (un-commanded transition) மூலம் எரிபொருள் கட்டுப்பாடு சுவிட்சுகள் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.விசாரணையின் முக்கியக் கண்டுபிடிப்புகள்:விமான விபத்து விசாரணைப் பணியகத்தின் (AAIB) அதிகாரிகள், விபத்துக்குள்ளான போயிங் ட்ரீம்லைனர் 787-8 விமானத்தில், விமானிகள் இடையே நடந்த உரையாடல்களை ஆய்வு செய்து வருகின்றனர். காக்பிட் குரல் பதிவில், ஒரு விமானி மற்றொருவரிடம், “ஏன் எரிபொருள் துண்டிக்கப்பட்டது?” என்று கேட்பதும், அதற்கு மற்றொரு விமானி, “நான் செய்யவில்லை” என்று பதிலளிப்பதும் பதிவாகியுள்ளது. இது, விமானியின் நேரடி கட்டளையின்றி எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.விபத்துக்கு முன் ஏற்பட்ட கோளாறுகள்: ஒரு தொடர் சங்கிலிவிசாரணையில் உள்ள முக்கிய தகவல்களில் ஒன்று, ஜூன் 12 அன்று அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அதே விமானத்தை டெல்லியில் இருந்து அகமதாபாத்திற்கு இயக்கிய ஒரு விமானி, தொழில்நுட்பப் பதிவேட்டில் ‘ஸ்டெபிலைசர் பொசிஷன் டிரான்ஸ்யூசர் குறைபாடு’ (Stabilizer Position Transducer Defect) என்று பதிவு செய்துள்ளார். ஸ்டெபிலைசர் பொசிஷன் டிரான்ஸ்யூசர் என்பது விமானத்தின் பிட்ச் எனப்படும் மேலும் கீழும் அசைவைக் கட்டுப்படுத்தும் ஒரு சென்சார் ஆகும். இந்த குறைபாடு, விமானக் கட்டுப்பாட்டில் தவறான பதில்களைத் தூண்டலாம், மேலும் எதிர்பாராத எரிபொருள் துண்டிப்பு சமிக்ஞைக்கு வழிவகுக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த கோளாறு சரி செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இது ஒரு சிஸ்டம் பிழையின் தொடக்கமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.மேலும் அதிர்ச்சி தரும் தகவலாக, இந்த விபத்து நிகழ்வதற்கு சில வாரங்களுக்கு முன்பு, இந்த விமானத்தில் இரண்டு பெரிய கோளாறுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.டிசம்பர் 2024: 2024 டிசம்பர் 12 அன்று, அதே AI-171 அகமதாபாத் – கேட்விக் விமானம் புறப்பட முடியவில்லை. ஒரு பெரிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏர் இந்தியா பயணிகளை ஏறுவதை ரத்து செய்ய வேண்டியிருந்தது. இது ஒரு தீர்க்க முடியாத மின் கோளாறு எனப் பதிவு செய்யப்பட்டது.2015: 2015 ஆம் ஆண்டில், கேபின் ஏர் கம்ப்ரசர் (CAC) சர்ஜ் காரணமாக அவசரமாக தரையிறக்க வேண்டியிருந்தது. இது போயிங் 787-8 ட்ரீம்லைனர்களில் அறியப்பட்ட ஒரு குறைபாடாகும்.முந்தைய நாட்களில், விமானத்தின் எஞ்சின் இண்டிகேஷன் மற்றும் க்ரூ அலர்ட்டிங் சிஸ்டம் (EICAS) சில சிஸ்டம் எச்சரிக்கைகளை (system warnings) காட்டியுள்ளதாகவும், எரிபொருள் சிஸ்டம் செயலிழப்பு (fuel system malfunction) உட்பட சில எச்சரிக்கைகள் தவறானவையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விசாரணை எதை நோக்கி?விபத்துக்குள்ளான விமானம் புறப்பட்ட சில விநாடிகளில், விமானிகள் வழக்கமான நடைமுறைகளை சரியான முறையில் செய்துள்ளனர். ஆனால், விமானம் 625 அடி உயரத்தை எட்டிய சில நொடிகளில், சென்சார்கள் ‘காற்று’ பயன்முறைக்கு மாறியுள்ளன. இதைத் தொடர்ந்து மின் கோளாறு அல்லது மென்பொருள் பிழை காரணமாக, விமானியின் கட்டளையின்றி செயல்கள் நிகழ்ந்து, எஞ்சின் செயலிழந்து, எரிபொருள் சுவிட்சுகள் துண்டிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.விசாரணைக் குழுவினர், விபத்து நடந்த விமானத்தின் “தொழில்நுட்ப கோளாறுகளின் வரலாறு” மற்றும் அதன் “மின் மற்றும் மென்பொருள் கூறுகளின் ஆரோக்கியம்” ஆகியவற்றை ஆராய்ந்து வருகின்றனர். ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் (FDR) மின் சமிக்ஞைகளை மட்டுமே பதிவு செய்கிறது என்பதால், கட்டுப்பாடுகள் எந்த நிலையில் இருந்தன என்பதை நேரடியாக அறிய முடியாது. இருப்பினும், சென்சார்களும், பின்னணி அமைப்புகளும் என்ன செய்தன என்பதை இது பதிவு செய்கிறது.விமானம் 3,600-4,900 அடி உயரத்தை எட்டியிருந்தால், அவசரகால தரையிறக்கத்தை மேற்கொண்டிருக்கலாம் என்று முன்னர் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், இந்த துரதிர்ஷ்டவசமான AI-171 விமானம் வெறும் 625 அடி உயரத்தை மட்டுமே எட்டியிருந்தது.விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணி, விஸ்வாஸ்குமார் ரமேஷ் (இருக்கை 11A), விமானம் புறப்பட்ட 40 விநாடிகளுக்குள் “ஒரு பெரிய சத்தத்துடன் நின்றுவிட்டது” என்றும், “பச்சை மற்றும் வெள்ளை விளக்குகள் ஒளிர ஆரம்பித்தன” என்றும், விமானிகள் “வேகத்தை அதிகரிக்க” முயன்றது போல உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எரிபொருள் சுவிட்சுகள் ஒரு அசாதாரண நிகழ்வு காரணமாக துண்டிக்கப்பட்டதா அல்லது FADEC (Full Authority Digital Engine Control) இன் எஞ்சின் கண்ட்ரோல் யூனிட் (விமானத்தின் மூளை) தவறாக செயல்பட்டு கட்டுப்பாடற்ற செயல்களைத் தூண்டியதா என்பது விரைவில் தெரியவரும்.Read in English: Under scanner: Tech snag hours before Air India crash, if switch can cut off without pilot command