இலங்கை
வரியைக் குறைக்காவிட்டால் ஆடை ஏற்றுமதிக்கு ஆபத்து; உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டு

வரியைக் குறைக்காவிட்டால் ஆடை ஏற்றுமதிக்கு ஆபத்து; உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டு
அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள 30 வீத வரியைக் குறைப்பதற்கு இலங்கை நடவடிக்கை எடுக்காவிட் டால், அமெரிக்க ஆடை வாங்குபவர்கள் குறைந்த வரிச் சலுகைகள் கொண்ட பிற நாடுகளை நோக்கித் திரும்பும் அபாயம் உள்ளது என்று ஆடை உற்பத்தித்துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ளதாவது:-
கடந்த ஆண்டு இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 4.7 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. அதில் 40.04 வீதம் அல்லது 1.9 பில் லியன் அமெரிக்க டொலர் அமெரிக்கா வுக்கான ஏற்றுமதிகள் மூலம் ஈட்டப்பட் டுள்ளது. இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், ஆடை ஏற்றுமதி வரு
வாய் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. அதில் 746.53 மில்லியன் அமெரிக்க டொலர் அமெ ரிக்கச் சந்தைக்கான ஏற்றுமதிகள் மூலம் ஈட்டப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும். அமெரிக்காவுக்கும் இடையில் வரவிருக்கும் வர்த்தக ஒப் பந்தம் காரணமாக இந்தியாவுக்கு 20 வீதத்துக்கும் குறைவான வரி விதிக்கப் படலாம் என்று தகவல்கள் வெளியாகி யுள்ளன. அதனால் இலங்கையின் ஆடைத் தொழிலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இந்தியாவில் இருந்து வரக்கூடும். இலங்கை மீது விதிக்கப் பட்ட 30 வீத வரியைக் குறைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப் படவேண்டும். இல்லாவிட்டால் ஆடைத் தொழில் ஆபத்தில் சிக்கக்கூடும்- என்றனர்