சினிமா
DJD Grand Finale-ஐ கலக்க வந்த நடிகர்..! வாயடைத்துப் போன தருணம்… வெளியான promo வீடியோ..

DJD Grand Finale-ஐ கலக்க வந்த நடிகர்..! வாயடைத்துப் போன தருணம்… வெளியான promo வீடியோ..
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மனங்களைக் கவர்ந்த நிகழ்ச்சி தான் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ் – Reloaded 3’.பல வாரங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த போட்டி நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், அதன் புரொமோ வீடியோ தற்பொழுது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.ஜீ தமிழின் யூடியூப் மற்றும் Instagram பக்கத்தில் வெளியான இந்த புரொமோவில், ஒவ்வொரு போட்டியாளரும் மேடையில் பிரமாண்டமாக நடனமாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதை பார்த்த நடுவர்கள் வாயடைத்துப் போய் நின்றனர். நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இந்த Grand Finaleவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் ரசிகர்களை பாராட்டும் நிகழ்ச்சிகளும் புரொமோவில் இடம் பெற்றிருந்தது.இந்த சீசனில் பங்கேற்ற ஒவ்வொரு ஜோடியும் தனித்தன்மையோடு காட்சியளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. புரொமோவின் இறுதியில், ஜோடிகள் அனைவரையும் பதற்றமாக பார்க்கும், உணர்ச்சி மிகுந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் டைட்டில் வின்னர் யார் என்பது ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் போது தான் தெரியவரும்.