Connect with us

பொழுதுபோக்கு

என்னடா இது ஹாரி பாட்டர் நடிகைக்கு வந்த சோதனை… வாகனம் ஓட்ட 6 மாதம் தடையாம்!

Published

on

Emma Watson banned from driving 6 months after speeding Tamil NewsEmma Watson banned from driving 6 months after speeding Tamil News

Loading

என்னடா இது ஹாரி பாட்டர் நடிகைக்கு வந்த சோதனை… வாகனம் ஓட்ட 6 மாதம் தடையாம்!

90 கிட்ஸ்கள், 2000 தொடக்கத்தில் பிறந்தவர்கள் கொண்டாடி தீர்த்த படம் ஹாரி பாட்டர். பல பகுதிகளாக வெளிவந்த இப்படம் ஆங்கிலத்தில்  வெளியாகி இருந்தாலும், தமிழ் டப்பிங்-கிற்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.  மாயா ஜால உலகில் நடக்கும் சாகசங்கள், பறக்கும் புத்தகங்கள், அமானுஷ்யங்கள் என ஒவ்வொரு காட்சிகளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலராலும் என்றென்றும் கொண்டாடப்பட்ட ஒரு படமாக இருந்தது. ஹாரி பாட்டர் படத்தின் ஒவ்வொரு பகுதி ஒரு பிரமிப்பை உருவாக்கியது. புத்தகத்தில் இருப்பதை விட ஒருபடி மேல் சென்று வியப்பை ஏற்படுத்தியது. படத்தில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் பல ரசிகர்களின் மனதில் பசு மரத்து அணி போல இன்றளவும் பதிந்து கிடக்கிறது. இந்நிலையில், ஹாரி பாட்டர் படங்களில் ‘ஹெர்மாயினி கிரேஞ்சர்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை எம்மா வாட்சன். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை 8 ஹாரி பாட்டர் படங்களில் நடித்துள்ளார் எம்மா வாட்சன். தனது 10 வயது முதல் நடிக்க வந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகி இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் படித்து வந்தார். இந்த நிலையில், பாரிஸ் நகரத்தை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகையும், விளம்பர அழகியுமான எம்மா வாட்சன் வாகனம் ஓட்ட 6 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்மா வாட்சன், கடந்த 2024 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலுள்ள ஆக்ஸ்போர்ட் நகரத்தில், 48 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில், 60 கி.மீ. வேகத்தில் தனது வாகனத்தை ஓட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, சி.சி.டி.வியில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளின் மூலம் அவர் மீது குற்றம்சுமத்தப்பட்ட நிலையில், தற்போது 6 மாதங்களுக்கு அவர் வாகனம் ஓட்டுவதற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன