இலங்கை
யாழ்ப்பாணத்தில் வயலுக்குள் பாய்ந்து பேருந்து விபத்து

யாழ்ப்பாணத்தில் வயலுக்குள் பாய்ந்து பேருந்து விபத்து
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 789 வழித்தட பேருந்து ஒன்று வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
குறித்த பேருந்தானது யாழில் இருந்து பயணிகளை ஏற்றியவாறு சித்தங்கேணி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மித்த பகுதியில் இருக்கும் வயலுக்குள் பாய்ந்துள்ளது.
குறித்த பேருந்து அண்ணளவாக 10-15 kmh வேகத்தில் சென்றுகொண்டிருந்தவேளை வலது புறமாக வீதிக்கு மாறி மெதுவாக சென்று வயலில் விழுந்தது.
எனினும் இந்த விபத்தில் பயணிகள் எவருக்கும் எந்தவிதமான உயிராபத்தும் ஏற்படவில்லை.
விபத்து தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.