Connect with us

பொழுதுபோக்கு

கோலிவுட்டில் ஒரு ஹாலிவுட்; ஹிட்டடித்த மோனிகா பாடல்: உண்மையில் யார் இந்த மோனிகா?

Published

on

Monica Original

Loading

கோலிவுட்டில் ஒரு ஹாலிவுட்; ஹிட்டடித்த மோனிகா பாடல்: உண்மையில் யார் இந்த மோனிகா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘மோனிகா’, சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்பாடல், புகழ்பெற்ற இத்தாலிய நடிகை மோனிகா பெல்லுச்சிக்கு ஒரு கௌரவம் சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கயத்தில, வரும்  ஆகஸ்ட் 14 அன்று வெளியாகவுள்ள கூலி படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த், நாகர்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சவுபின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர் கான் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த படத்தில் மோனிகா பாடல் ஜூலை 11-ந் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.நடிகை பூஜா ஹெக்டே கவர்ச்சியான, ரெட்ரோ பாணியிலான நடன அசைவுகளுடன் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த பாடல் புகழ்பெற்ற இத்தாலிய நடிகை மோனிகா பெல்லுச்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மோனிகா பெல்லுச்சி தனது வசீகரமான அழகாலும், சக்திவாய்ந்த நடிப்புத் திறனாலும் உலகளவில் அறியப்பட்டவர். ‘மலீனா’ (Malena), ‘தி மேட்ரிக்ஸ் ரீலோடட்’ (The Matrix Reloaded), ‘தி பேஷன் ஆஃப் தி கிறிஸ்து’ (The Passion of the Christ) மற்றும் ஜேம்ஸ் பாண்டின் ‘ஸ்பெக்டர்’ (Spectre) போன்ற படங்கள் மூலம் அவர் சர்வதேசப் புகழை பெற்றுள்ளார்.60 வயதான இந்த நடிகை, கவர்ச்சி மற்றும் கருணைக்கு ஒரு மறுவரையறையை உருவாக்கியவர் எனப் போற்றப்படுகிறார். ஐரோப்பிய மற்றும் ஹாலிவுட் திரையுலகம் இரண்டிலும் துணிச்சலான, உணர்ச்சிப்பூர்வமான கேரக்டர்களில் நடித்ததற்காக பாராட்டுக்களை பெற்று வருகிறார், இவரின் மகள் பெயர் தேவா. அதே சமயம் கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் கேரக்டரின் பெயரும் தேவா தான்.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்ட இப்பாடல், படத்தின் விளம்பரங்களின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த பாடல், மோனிகா பெல்லுச்சியின் உலகளாவிய கவர்ச்சியைத் தமிழ்த் திரையுலகின் வண்ணமயமான, துணிச்சலான பாணியுடன் கலக்கிறது. இப்பாடலின் மூலம், இந்திய ரசிகர்களை ஒரு சர்வதேச பிரபலத்துடன் படம் இணைக்கிறது. மோனிகா பாடலில் பூஜா ஹெக்டே அணிந்துள்ள துணிச்சலான சிவப்பு உடை, மோனிகா பெல்லுச்சிக்கு ஒரு காட்சி மரியாதையா தெரிகிறது.’இர்ரிவர்சிபிள்’ (Irreversible) நடிகையான மோனிகா பெல்லுச்சி, ‘மலேனா’ மற்றும் ‘ஸ்பெக்டர்’ போன்ற படங்களில் சிவப்பு அல்லது அடர் நிற ஆடைகளை அணிந்ததற்காகப் பிரபலமானவர். மோனிகா பாடலில் நடிகர் சவுபின் ஷாஹிர் தனது நடன அசைவுகளால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். சமூக வலைத்தளங்களில் இவரது நடனம் குறித்து ஏராளமான பதிவுகள் குவிந்து வருகின்றன. ‘கூலி’ திரைப்படம் வெளியான பிறகு, மோனிகா பாடலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன