சினிமா
பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மீது மோசடி வழக்குப்பதிவு

பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மீது மோசடி வழக்குப்பதிவு
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. இவர், நயன்தாராவுடன் இணைந்து ‘டியர் ஸ்டூடன்ஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘பென்ஸ்’ படத்தில் நிவின் பாலி நடித்துவருகிறார். இவர் ஏற்கனவே நடித்து முடித்த ஏழு கடல் ஏழு மலை, டியர் ஸ்டூடன்ஸ் ஆகிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது.
மேலும், நடிகர் பகத் பாசில் தயாரிப்பில் ‘பெத்லஹம் குடும்ப யூனிட்’ என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
2022ல் வெளியான ‘மஹாவீர்யார்’ படத்தின் தோல்வியால் ரூ.95 லட்சம் வழங்குவதுடன், ‘ஆக்ஷன் ஹீரோ பிஜு பார்ட் 2’ படத்தை தயாரிக்க வாய்ப்பு வழங்குவதாக நிவின் பாலி உறுதியளித்திருந்ததாக தயாரிப்பாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
‘மஹாவீர்யார்’ படத்தின் தயாரிப்பாளர் அளித்த புகாரில் நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைன் இதுவரை குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை.
லங்கா4 (Lanka4)
அனுசரணை