இலங்கை
வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சேட்டை ; தலைமை பௌத்த பிக்கு கைது

வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் சேட்டை ; தலைமை பௌத்த பிக்கு கைது
இலங்கைக்கு சுற்றுலா வந்த நியூசிலாந்து பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் உனவதுன பகுதியில் உள்ளவிகாரையைச் சேர்ந்த பௌத்த துறவி கைது செய்யப்பட்டதாக உனவடுன சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர்.
ஐம்பது வயதான நியூசிலாந்து பெண் உனவடுன சுற்றுலா காவல் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து, பயணியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் 81 வயது மூத்த பெளத்த பிக்கு ஒருவர் உனவதுன சுற்றுலா பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
குறித்த பௌத்த பிக்கு விகரையின் தலைமை துறவியாக பணியாற்றி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணி உனவடுன பயணிகள் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்த பின்னர் இவ்வழக்கு ஹபரதுவ பொலிஸாருக்கு மாற்றப்பட்டது.
விசாரணையின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட பெண் கராபிட்டிய வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியால் பரிசோதிக்கப்படவுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.