Connect with us

இலங்கை

யாழில் தீயில் எரிந்த உதவி பிரதேச செயலாளரின் மரணம் ; கொழும்பு பொலிஸாரினால் கணவர் கைது

Published

on

Loading

யாழில் தீயில் எரிந்த உதவி பிரதேச செயலாளரின் மரணம் ; கொழும்பு பொலிஸாரினால் கணவர் கைது

யாழ்ப்பாணம் சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரை கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

Advertisement

கடந்த இரண்டாம் மாதம் தீயில் எரிந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சிகிச்சை பலனின்றி இன்றி உயிரிழந்துள்ளார்.

ஆறு மாதகர்ப்பிணியாக இருந்த குறித்த பெண் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தாய் மற்றும் ஆறு மாத சிசுவை உயிருடன் மீட்கும் பணிகளும் இடம் பெற்ற நிலையில் சிகிச்சை  பயனளிக்காத நிலையில் அவரது உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இறந்த தமிழினியின் பெற்றோர் தரப்பில் கோபாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் குறித்த பெண்ணின் கணவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன