Connect with us

வணிகம்

டிசம்பருக்குள் தங்கம் விலை 15% உயரும்… உலக தங்க கவுன்சில் ஷாக் தகவல்

Published

on

Gold BEES

Loading

டிசம்பருக்குள் தங்கம் விலை 15% உயரும்… உலக தங்க கவுன்சில் ஷாக் தகவல்

உலக தங்க கவுன்சில் (World Gold Council – WGC) சமீபத்தில் வெளியிட்ட குறிப்பு, இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் தங்கத்தின் விலை தற்போதைய நிலைகளில் இருந்து 15% வரை உயரக்கூடும் என்றும், அவுன்ஸ் ஒன்றுக்கு 3,839 டாலர் என்ற அளவை எட்டக்கூடும் என்றும் கணித்துள்ளது. இது ஆண்டுக்கு 40% வருமானமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.பொருளாதார மற்றும் நிதி நிலைமைகள் மோசமடைந்து, பணவீக்கம் மற்றும் புவிசார் பொருளாதார பதற்றங்கள் அதிகரிக்கும் பட்சத்தில், பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் தேவை கணிசமாக உயர்ந்து, தற்போதைய நிலையில் இருந்து 10% முதல் 15% வரை விலை உயரக்கூடும் என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.உலக தங்க கவுன்சில் தனது அடிப்படை சூழ்நிலையில், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் (H2-CY25) தங்கம் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. தற்போதைய நிலைகளை விட சுமார் 0% முதல் 5% வரை உயர்ந்து, ஆண்டுக்கு 25% முதல் 30% வரை வருமானத்தை தரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. புவிசார் பொருளாதார நிச்சயமற்ற தன்மை முதலீட்டாளர்களை எச்சரிக்கையாக வைத்திருக்கும் என்றும் உலக தங்க கவுன்சில் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது.தங்கம் Vs பிற சொத்துகள்அமெரிக்க பணவீக்க தரவுகள் முன்னேற்றத்தின் அறிகுறிகளை காட்டினாலும், நிலைமைகள் விரைவாக மோசமடையக்கூடும் என்ற கவலைகள் நீடிக்கின்றன. “டாலர் தொடர்பான அழுத்தங்கள் நீடிக்க வாய்ப்புள்ளது, மேலும் அமெரிக்க பொருளாதாரத்தின் ‘சிறப்புத் தன்மை’ முடிவடைவது குறித்த கேள்விகள் முதலீட்டாளர் விவாதங்களில் ஆதிக்கம் செலுத்தலாம். ஒட்டுமொத்தமாக, இந்த நிலைமைகள் தங்கம் ஒரு நிகரப் பயனாளி என்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்த ஆண்டின் முதல் பாதியில் (2025 H1) தங்கம் மற்றும் வெள்ளி விற்பனைச் சந்தைகள், பங்குச் சந்தைகள், மத்திய வங்கிகளின் கொள்முதல் மற்றும் தங்க இ.டி.எஃப்-கள் (Exchange Traded Funds) ஆகியவற்றில் அதிகரித்த வர்த்தக நடவடிக்கைகளால் தங்கத்திற்கான தேவை வலுவாக இருந்தது. இது தினசரி சராசரி தங்க வர்த்தக அளவை 2025 முதல் பாதியில் 329 பில்லியன் டாலராக உயர்த்தியது. இது உலக தங்க கவுன்சிலின் பதிவுகளில் மிக உயர்ந்த அரை ஆண்டு எண்ணிக்கையாகும்.உலகளாவிய தங்க இ.டி.எஃப்-களின் மொத்த நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துகளை (AUM) 41% உயர்த்தி 383 பில்லின் டாலராக உயர்த்தியது என்று உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த இருப்புகள் 397 டன்கள் அதிகரித்து, 3,616 டன்களாக உயர்ந்தன. இது ஆகஸ்ட் 2022 க்குப் பிறகு மிக உயர்ந்த மாத இறுதி அளவாகும் என்று உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன