சினிமா
சினிமா ஹீரோவிலிருந்து சமூக ஹீரோவாக அக்ஷய்குமார் …! 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு காப்பீடு!

சினிமா ஹீரோவிலிருந்து சமூக ஹீரோவாக அக்ஷய்குமார் …! 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு காப்பீடு!
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய்குமார். 1991ம் ஆண்டு வெளியான சௌகான் திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தை தொடங்கினார். முதல் படமே வெற்றி பெற்றதும், மை கிலாடி து அனாரி, மோஹ்ரா போன்ற வெற்றிப்படங்களில் நடித்ததன் மூலம் மாஸ் ஹீரோவாக வலம் வந்தார். தமிழ் சினிமாவிலும் தனது நடிப்பின் மூலம் தடம் பதித்துள்ள இவர், 2018ஆம் ஆண்டு ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த 2.0 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அந்த வேடம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது . சமீபத்தில், பா. ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் ஒரு ஸ்டண்ட் பயிற்சியாளர் உயிரிழந்துள்ளார். இதனால் மிகுந்த வருத்தமடைந்த அக்ஷய்குமார், 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு காப்பீடு (இன்சூரன்ஸ்) ஏற்பாடு செய்துள்ளார். இது அவரின் சமூகப் பொறுப்பை காட்டுகின்றது. மேலும் ரசிகர்கள் இவருடைய இந்த செயலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.