இலங்கை
கடையொன்றில் திடீர் தீ விபத்து; ஹட்டன் பகுதியில் பதற்றம்!

கடையொன்றில் திடீர் தீ விபத்து; ஹட்டன் பகுதியில் பதற்றம்!
ஹட்டன் பகுதியிலுள்ள ஒரு காலணி கடையொன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதியம் 1:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடையில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியுள்ளது.
மேலும் ஹட்டன் டிக்கோயா நகர சபை தீயணைப்புத் துறை அதிகாரிகள் தீ பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையெனவும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.