பொழுதுபோக்கு
கனவில் வந்த அம்மன்; வழிபாட்டுக்கு வந்து மடிப்பிச்சை ஏந்திய நடிகை நளினி: வைரல் போட்டோ!

கனவில் வந்த அம்மன்; வழிபாட்டுக்கு வந்து மடிப்பிச்சை ஏந்திய நடிகை நளினி: வைரல் போட்டோ!
நாயகியாக பல வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது காமெடி கேரக்டரில் நடித்து அசத்தி வரும் நடிகை நளினி, சாமி என் கனவில் வந்து சொன்னதால், மடிப்பிச்சை எடுப்பதாக கூறியுள்ளார்.1981-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ராணுவ வீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நளினி. அதனைத் தொடர்ந்து, விஜயகாந்த், அர்ஜூன், மோகன், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நளினி, 1988-ம் ஆண்டு கழுகுமலை கள்வன் என்ற படத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு நடிகர் ராமராஜனை திருமணம் செய்துகொண்டார்.10 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜன் நளினி இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், மீண்டும் 2002-ம் ஆண்டு என்ட்ரி கொடுத்த நளினி, காதல் அழிவதில்லை படத்தில் சார்மியின் அம்மா கேரக்டரில் நடித்திருந்தார். அதன்பிறகு ஒரு சில படங்களில் நெகடீவ் ரோலில் நடித்து வந்த நளினி பிறகு காமெடிக்கு மாறினார். அந்த வகையில் 2005-ம் ஆண்டு வெளியான லண்டன் என்ற படத்தில் வடிவேலுவின் மனைவி கேரக்டரில் காமெடியில் நளினி கலக்கியிருப்பார்.அதேபோல் அரண்மனை படங்களிலும் காமெடியில் அசத்திய நளினி தற்போது சீரியல் திரைப்படம் என பிஸியாக நடித்து வருகிறார். அவ்வப்போது யூடியூப் சேனல்களிலும் பேட்டி அளித்து வருகிறார். இதனிடையே, நடிகை நளினி அடிக்கடி கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் குறிப்பாக திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவில் மற்றும் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டுள்ளார்.இந்நிலையில், ஆடி மாதம் பிறந்ததையொட்டி திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் வழிப்பட்ட நடிகை நளினி, அதன்பின் கோவில் வளாகத்தில் நின்று மடிப்பிச்சை ஏந்தினார். இதனை பார்த்து பக்தர்கள் பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில், அம்மன் தனது கனவில் வந்து எனக்காக என்ன செய்யப் போகிறாய் என கேட்டதால் மடிப்பிச்சை ஏந்தி அதில் வரும் காணிக்கையை திருப்பணிக்கு வழங்குவதாக விளக்கம் அளித்துள்ளார்.நளினி மடிப்பிச்சை எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.