இலங்கை
தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு!

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு!
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (18) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்றைய தினம் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் காரில் இருந்த நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “படோவிட்ட அசங்க”என்பவரின் சகா என தெரியவந்துள்ளது.
பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “கொஸ் மல்லி” என அழைக்கப்படும் சாந்த குமார ஹேவத் என்பவரின் சகாக்களால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை