சினிமா
தீபாவளி அன்று பிரதீப் ரங்கநாதன் Vs துருவ் விக்ரம்’..!திரையரங்குகளில் மோதல்..!

தீபாவளி அன்று பிரதீப் ரங்கநாதன் Vs துருவ் விக்ரம்’..!திரையரங்குகளில் மோதல்..!
தமிழ் சினிமாவில் இப்போது பெரிய நடிகர்களின் படங்கள் என்பதே ரசிகர்களை திரையரங்குகளுக்கு இழுக்கும் முக்கியக் காரணமாக உள்ளது. ஆனால், ஒருவேளை படம் மொக்கையா இருந்தால் ரசிகர்கள் பின்னால் விரைந்து விமர்சிக்க தயங்கவில்லை.இந்நிலையில், இயக்குநர் மற்றும் நடிகராக பெயர் பெற்ற பிரதீப் ரங்கநாதன் தனது புதிய திரைப்படமான ‘டூட்’ திரைப்படத்தை 2025 அக்டோபர் 17, தீபாவளி தினத்தில் வெளியிட உள்ளார். இவரது இயக்கத்தில் கடந்த 2022-ல் வெளியான ‘லவ் டுடே’ வெறும் 5 கோடி செலவில் எடுக்கப்பட்டும், 100 கோடியை கடந்த வசூல் சாதனையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, 2025-ல் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய ‘ட்ராகன்’ திரைப்படத்தில் நடித்த பிரதீப், இந்த படத்தின் மூலம் 150 கோடி வசூலை பதிவு செய்தார். இதன் மூலம், ஹீரோ எனும் பட்டத்தை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.தீபாவளியில் வெளியாக உள்ள “டூட்” க்கு நேரடி போட்டியாக, துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பைசன்’ திரைப்படமும் வெளியாகிறது. இவ்விரு படங்களும் தீபாவளி ரிலீஸ் என்பதால், தமிழ்நாட்டில் திரையரங்க உரிமைகள் மூன்று மாதங்களுக்கு முன்பே பரபரப்பாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. மக்கள் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், எந்த திரைப்படம் வசூலில் முன்னிலை வகிக்கும் என்பது திரையரங்குகளுக்கு சென்ற பிறகு தான் தெரியவரும்.