இலங்கை
ஈழ நிலத்தோடு எனக்கிருக்கும் நெருக்கம்; மனம் திறந்த கதைசொல்லி பவா செல்லத்துரை

ஈழ நிலத்தோடு எனக்கிருக்கும் நெருக்கம்; மனம் திறந்த கதைசொல்லி பவா செல்லத்துரை
தமிழ் மக்கள் போராடிய மற்றும் உயிர் நீர்த்த இடத்திற்கு தான் உணர்வு பூர்வமாக சென்று பார்வையிட்டதாக கதைசொல்லி பவா செல்லத்துரை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களிற்கும் தான் சென்று பார்த்த நினைவுகள் இந்த நிமிடம் வரை மனதில் உள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கதைசொல்லி பவா செல்லத்துரை ஐபிசி தமிழிற்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எத்தனை தடவை இலங்கைக்கு வந்தாலும் ஒரு தடவை கூட சுற்று பயணமாக இருக்காது.
ஏனென்றால் அவ்வளவு இலக்கியங்களை ஈழ மண்ணில் இருந்து வாசித்து இருக்கின்றேன்.
வாசித்த இடங்களை தரிசிப்பதற்காகவே நான் வருகை தருகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் முழுமையான காணொளியை இங்கு காணலாம்.