Connect with us

சினிமா

வெற்றிமாறனிடம் முரண்டு புடிக்கும் சூர்யா, வெயிட்டிங்கில் தனுஷ்.. இருக்குற நிலைமைக்கு இதெல்லாம் தேவையா?

Published

on

Loading

வெற்றிமாறனிடம் முரண்டு புடிக்கும் சூர்யா, வெயிட்டிங்கில் தனுஷ்.. இருக்குற நிலைமைக்கு இதெல்லாம் தேவையா?

நடிகர் சூர்யாவுக்கு கெட்ட நேரம் என்பதை தாண்டி அவர் எடுக்கும் சில முடிவுகள் சமீப காலமாக சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும். கங்குவார் படத்திற்காக மூன்று ஆண்டுகள் செலவு செய்த சூர்யா அதற்கு அயன், ஆதவன் போன்ற கதைகளும் கொண்ட மூன்று படங்களை வருடத்திற்கு ஒன்று என ரிலீஸ் பண்ணி இருக்கலாம்.

சூர்யா எதார்த்தமான நடிகராக பக்கத்து வீட்டு பையனாக கண்ணுக்குத் தெரியும் வரை பெரிய அளவில் ஹிட் கொடுத்துக் கொண்டிருந்தது தான் இருந்தார். சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீமுக்கு பிறகு தன்னுடைய நிலையை மாற்றியதால் தான் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

Advertisement

இயக்குனர் வெற்றிமாறனின் கதையில் நடிக்க பலரும் தவம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சூர்யாவுக்கு அந்த வாய்ப்பு கைதேடி வந்தது. படம் ஆரம்பித்த நேரத்துக்கு இந்நேரம் ரிலீஸ் ஆகி சூர்யாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி இருக்கும்.

ஆனால் நமக்கு போன பட்டாசாக இப்படி ஒரு படம் இருப்பதை மறக்கும் அளவுக்கு நாட்கள் நீண்டு விட்டது. இதற்கு என்ன காரணம் என்பதை வலைப்பேச்சு சேனல் பிஸ்மி சொல்லி இருக்கிறார். அதாவது சூர்யாவுக்கு வாடிவாசல் படத்தில் அமீர் நடிப்பது பிடிக்கவில்லையாம்.

பருத்திவீரன் சமயத்தில் ஏற்பட்ட பிரச்சனை தான் இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. வெற்றி மாறனுக்கு இந்த கேரக்டரில் அமீர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. இதற்கிடையில் ஞானவேல் ராஜா வெற்றிமாறனை சந்தித்து அமீர் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என சூர்யா நினைப்பதாக சொல்லி இருக்கிறார்.

Advertisement

இதை வெற்றிமாறனுக்கு பெரிய கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எதுவாக இருந்தாலும் அவரே நேரடியாக வந்து சொன்னால் என்ன என்று கோபம் தான். அமீரை இந்த படத்தில் இருந்து எடுத்தால் தான் சூர்யா நடிப்பார் என்ற நிலைமை தான்.

இதை தாண்டி அமீர் நடிக்க இருக்கும் அந்த கேரக்டர் தனுஷுக்கு ரொம்ப பிடித்து போனதால் எப்போ கூப்பிட்டாலும் அந்த கேரக்டரில் போய் நடிப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறார். சூர்யாவை பொருத்தவரைக்கும் இப்போது ஏதாவது ஒரு படத்தின் மூலம் தன்னை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.

அப்படி இருக்கும் பட்சத்தில் தன்னுடைய நிலை அறியாது அமீருடன் சேர மாட்டேன் என அடம்பிடிப்பதெல்லாம் சின்ன குழந்தைத்தனமாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் கதை ஒன்று இப்படி அமையும் போது எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தும் சாதாரணமாக சிம்பு மற்றும் நயன்தாரா சேர்ந்து இது நம்ம ஆளு படத்தில் நடிக்கவில்லையா. சினிமா வேறு பர்சனல் பிரச்சனை வேறு என நினைத்தால் மட்டும் தான் இதையெல்லாம் மறந்து நடிக்க முடியும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன