சினிமா
கார் ரேஸிங்கில் கலக்கும் அஜித் குமார்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ…

கார் ரேஸிங்கில் கலக்கும் அஜித் குமார்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ…
பல நாட்கள் கனவு நிறைவேறியது போல தல அஜித் ரசிகர்கள் கேட்டு வந்த விடாமுயற்சி அப்டேட் டீச்சராக வெளிவந்தது. சைலண்டாக வந்து ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக இவர் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பதை போன்றே கார் ரேசிங்கிலும் கலக்கி வருகிறார். கார் ரேஸில் மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித் பல சவாலான போட்டிகளில் கலந்து இருக்கிறார். இதற்காக அவரது போர்சி கார் தயாராகி இருக்கிறது. அந்தக் காரின் முன்னால் அவர் எடுத்துக்கொண்ட விதவிதமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. அடுத்த ஆண்டு ஐரோப்பாவில் நடக்கவுள்ள ஜிடி4 சாம்பியன்ஷிப்பிலும் அஜித் தனது குழு உடன் பங்கு பெற இருக்கிறார். சமீபகாலமாகவே அஜித் நிறைய கார்களை வாங்கி குவித்து வருகிறார். இப்போது தனது கார் ரேஸிங்கில் கலந்து கொள்ளும் வீடியோ ஒன்று மாஸாக வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…