இலங்கை
இரவில் கடும் சிரமங்களை எதிர்கொள்ளும் ஹட்டன் ரயில் நிலைய பயணிகள்!

இரவில் கடும் சிரமங்களை எதிர்கொள்ளும் ஹட்டன் ரயில் நிலைய பயணிகள்!
ஹட்டன் ரயில் நிலையத்தின் மின்னியற்றிகளில் (generator) எரிபொருள் இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் ஹட்டன் ரயில் நிலையம் இருளில் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் ரயில் நிலையத்தின் மின்னியற்றிகளில் எரிபொருள் இல்லை என ரயில்வே திணைக்களத்திடம் பல முறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற காலனிலை மற்றும் பலத்த காற்று காரணமாக ஹட்டன் ரயில் நிலையத்தில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
மின்சார பயன்பாட்டிற்காக மின்னியற்றிகள் பொருத்தப்பட்டிருந்தாலும் போதுமான அளவு எரிபொருள் இல்லாத காரணத்தினால் மின்னியற்றிகள் செயலிழந்துள்ளன.
இரவு நேரங்களில் ஹட்டன் ரயில் நிலையம் இருளில் மூழ்கியுள்ளதால் பயணிகள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஹட்டன் ரயில் நிலைய ஜனக பெர்னாண்டோ பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.