பொழுதுபோக்கு
மற்ற படம் கேன்சல் ஆனாலும் பரவாயில்லை; அஜித் கூட நடிச்சே ஆகணும்: அடம் பிடித்து ஜோடி சேர்ந்த நடிகை; ஏன் தெரியுமா?

மற்ற படம் கேன்சல் ஆனாலும் பரவாயில்லை; அஜித் கூட நடிச்சே ஆகணும்: அடம் பிடித்து ஜோடி சேர்ந்த நடிகை; ஏன் தெரியுமா?
சினிமாவில் தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ அஜித்குமார் என்றும், அவருடன் இணைந்து பணியாற்ற தான் விரும்பியதாகவும் நடிகை ராசி மந்த்ரா, கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுடனான நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட நடிகை ராசி மந்த்ரா தனது 9 வயதிலேயே, 1989 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான ‘மமதால கோவெல்லா’ மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அடியெடுத்து வைத்தார். மேலும், ‘ரங்பாஸ்’, ‘ஜோடிதார்’, ‘சூரஜ்’ உள்ளிட்ட இந்தி திரைப்படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.தெலுங்கில் ‘சுபகாங்க்ஷலு’ திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக ‘கோகுலம்லோ சீதா’, ‘ஸ்நேஹிதலு’, ‘பண்டகா’, ‘கில்லி கஜ்ஜலு’ போன்ற படங்களில் ராசி மந்த்ரா நடித்தார். தமிழில் ‘பிரியம்’ என்ற திரைப்படத்தின் மூலம் 1996-ஆம் ஆண்டில் அறிமுகமானார்.இதைத் தொடர்ந்து, ‘லவ் டுடே’, ‘ரெட்டை ஜடை வயசு’, ‘பெரிய இடத்து மாப்பிள்ளை’, ‘கங்கா கௌரி’, ‘தேடினேன் வந்தது’, ‘கல்யாண கலாட்டா’ போன்ற பல்வேறு படங்களில் முதன்மையான பாத்திரத்தில் நடித்தார். தனது திருமணத்திற்கு பிறகு திரைத் துறையில் சற்று இடைவெளி எடுத்த ராசி மந்த்ரா, தற்போது மீண்டும் சில படங்கள் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில், கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த நேர்காணலில், சினிமாவில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித்குமார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, “நான் திரைத் துறைக்கு வருவதற்கு முன்பாகவே எனக்கு நடிகர் அஜித்குமாரை பிடிக்கும். சினிமாவில் நுழைந்த பின்னர் அஜித்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அவர் நடித்த ‘ஆசை’ திரைப்படத்தில் கதாநாயகிக்கு டப்பிங் டெஸ்டுக்காக சென்றிருந்தேன். அந்த தருணம் முதல் அஜித்தை எனக்கு மிகவும் பிடித்தது. டீனேஜ் பெண்கள் விரும்பும் ஒரு நாயகனாக அஜித் வலம் வந்தார். இதனிடையே, என்னுடைய சினிமா பயணத்தையும் தொடங்கி ஹீரோயினாக தொடர்ந்து நடித்தேன். அப்போது, தெலுங்கு, தமிழ் என்று பிசியாக நடித்த போது, ‘ரெட்டை ஜடை வயசு’ படத்தில் அஜித்துடன் இணைந்து நடிப்பதற்கு என்னிடம் கேட்டனர்.அதனால், மற்ற படங்களை கேன்சல் செய்து விட்டாவது, அஜித்துடன் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த அளவிற்கு அஜித்தை பிடிக்கும். ஆனால், இந்த தகவலை இதுவரை அஜித்திடமோ அல்லது வேறு யாரிடமோ நான் கூறியதில்லை” என்று நடிகை ராசி மந்த்ரா தெரிவித்துள்ளார்.