பொழுதுபோக்கு
கமல் முதல் விஜய் வரை; இவர்கள் இப்படித்தான்; எல்.சி.யூ நடிகர் ரியல் கேரக்டர் பற்றி சொன்ன லோகேஷ்! த்ரோபேக் வீடியோ

கமல் முதல் விஜய் வரை; இவர்கள் இப்படித்தான்; எல்.சி.யூ நடிகர் ரியல் கேரக்டர் பற்றி சொன்ன லோகேஷ்! த்ரோபேக் வீடியோ
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கார்த்தி, சூர்யா, விஜய், விஜய் சேதுபதி, மற்றும் கமல் ஹாசன் ஆகியோருடன் பணிபுரிந்த தனது அனுபவங்களை ஜேஎஃப்டபுள்யூ பின்ச் யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார். இந்த வீடியோ, லோகேஷ் கனகராஜ் எல்.சி.யூ நடிகர்களின் நிஜ குணாதிசயங்களை எப்படிப் பார்க்கிறார் என்பதை பற்றி தெரிவித்துள்ளார். கார்த்தியைப் பொறுத்தவரை, லோகேஷ் அவரை சினிமாவைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாத, எந்த வித டீவியேஷனும் இல்லாத நடிகர் என்று புகழ்ந்துள்ளார். சூர்யாவுடனான ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தின் அனுபவம், வெறும் இரண்டு நாட்களில் கூட, அந்தக் கதாபாத்திரத்திற்காக சூர்யா ஐந்து மணிநேரம் செலவழித்து, மிகுந்த அர்ப்பணிப்புடன் மாற்றங்களை கொண்டு வந்ததை லோகேஷ் வியந்து பார்த்ததாக கூறினார். மேலும் அவருடன் தொடர்ந்து பணி செய்ய ஆசைப்படுவதாக தெரிவித்தார்.தளபதி விஜய்யுடன் மூன்று வருடப் பயணம் மேற்கொண்ட லோகேஷ், அவரை ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையில் நெருங்கிய அண்ணனாக உணர்வதாகக் குறிப்பிட்டார். மக்கள் செல்வர் விஜய் சேதுபதியுடன் ‘மாஸ்டர்’ மற்றும் ‘விக்ரம்’ படங்களில் பணியாற்றிய அனுபவம், அவரது எதார்த்தமான நடிப்பையும், சினிமாவுக்குத் தேவையான மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் அர்ப்பணிப்பையும் பார்த்ததாக பெருமையாக கூறினார். குறிப்பாக, ‘விக்ரம்’ படத்தில் பூஜா தேவரியாவின் உதவி பெற்று நடிப்பைத் திருத்திக் கொண்டது, விஜய் சேதுபதியின் அடக்கத்தையும், கற்றுக் கொள்ளும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியதாகவும் அவர் தனக்கு மற்றொரு அண்ணன் என்றும் லோகேஷ் கூறுகிறார்.இறுதியாக, உலக நாயகன் கமல் ஹாசன் பற்றிப் பேசும்போது, லோகேஷ் தனது அளவற்ற மரியாதையையும், நீண்ட நாள் கனவுகளையும் வெளிப்படுத்துகிறார். ஒரு ரசிகனாக கமலின் வளர்ச்சியைப் பார்த்த அவர், அவரை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெருமிதமாக இருப்பதாக தெரிவித்தார். ஆனால், தனது தலைவனை எவ்வளவு தூரம் சிறப்பாகச் செலிப்ரேட் செய்ய முடியுமோ, அதைச் செய்ததாக ‘விக்ரம்’ படம் மூலம் லோகேஷ் பெருமிதம் கொள்கிறார்.இது எல்.சி.யூ நடிகர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களையும், லோகேஷின் பார்வையில் அவர்களின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் ஒரு சுவாரஸ்யமான தொகுப்பாகும். அவர்களுடன் எல்லாம் இணைந்து பணியாற்றியது தனக்கு பெருமை என்றும் லோகேஷ் கனகராஜ் கூறினார்.