பொழுதுபோக்கு
‘கூடை மேல் கூடை வச்சி’ இத்தனை கூடை இருக்கு போதுமா? யுகபாரதி கேள்விக்கு இயக்குனர் வைத்த ஷாக்!

‘கூடை மேல் கூடை வச்சி’ இத்தனை கூடை இருக்கு போதுமா? யுகபாரதி கேள்விக்கு இயக்குனர் வைத்த ஷாக்!
‘ரம்மி’ திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். அறிமுக இயக்குனர் கே. பாலகிருஷ்ணன் இயக்கிய இந்தப் படத்தில் இனிகோ பிரபாகர், காயத்ரி ஷங்கர், விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் கூட மேல கூட வச்சு பாடலின் பாடலாசிரியர் யுகபாரதி, அந்த பாடல் உருவான விதம் குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.”கூட மேல கூட வச்சு” என்ற பாடல், தமிழ் திரையிசையில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பாடலின் வரிகள் உருவான விதமும், அதற்குப் பின்னணியில் நடந்த சுவாரஸ்யமான உரையாடல் குறித்தும் ஆனந்த்ஃபாஸ்ட்சினிட்ரேக் யூடியூப் பக்கத்தில் கவிஞர் யுகபாரதி நகைச்சுவையுடன் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். ஒரு திரைப்பட இயக்குனருடன் யுகபாரதிக்கு நடந்த உரையாடலே இந்தப் பாடலின் பிறப்புக்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.கதாநாயகி ஐஸ்வர்யாராஜேஷ் தனது அக்காவுடன் சைக்கிளில் செல்கிறார், அவரது மடியில் ஒரு கூடை இருக்கிறது. இந்தக் காட்சியை விவரித்த இயக்குனர், பாடலில் கூடை கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். சிறு வயதிலிருந்தே இந்தக் காட்சியைப் பார்த்து வருவதாகவும், கூடை இல்லாமல் பாடல் இருக்கக் கூடாது என்றும் அவர் உறுதியாகக் கவிஞர் யுகபாரதி கூறினார்.இயக்குனரின் இந்தத் தொடர்ச்சியான வலியுறுத்தல், யுகபாரதிக்கு ஒரு நகைச்சுவையான சிந்தனையைத் தூண்டியதாகவும் இயக்குனர் தனது காதலி கூடையுடன் எங்கோ சென்றிருப்பார் என்றும் யுகபாரதி நினைத்து பாடலை எழுதினாராம். இந்த எண்ணத்தின் தூண்டுதலோடு, இயக்குனரின் ‘கூடை கூடை’ என்ற கோரிக்கையும் ஏற்று, “கூட மேல கூட வச்சு கூடலூர் போறவளே, உன் கூட கொஞ்சம் நானும் வர கூட்டிட்டு போனா என்ன” என்ற அழகான வரிகள் உருவானதாக கூறினார்.ஒரு எளிய காட்சி விளக்கத்திலிருந்து, ஒரு இயக்குனரின் பிடிவாதமான கோரிக்கையிலிருந்து, ஒரு கவிஞரின் நகைச்சுவையான கற்பனையிலிருந்து இந்த பாடல் பிறந்ததாக கூறினார். “கூடை மேல் கூடை வச்சு” பாடல், ஒரு படைப்பு எப்படி எதிர்பாராத தருணங்களில் உருவாகிறது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.